விஜய் ஆண்டனி தற்போது,’அக்னி சிறகுகள்’, தமிழரசன், காக்கி மற்றும் ,பிச்சைக்காரன் 2’ ஆகிய படங்களில் நடித்து வருகிறார். லாக்டவுனில் அறிவிக்கப்பட்டுள்ள தளர்வுகள் காரணமாக இப்படங்களின் படப் பிடிப்புகள் விரைவில் தொடங்கும் எனத் தெரிகிறது. இந்நிலையில் விஜய் ஆன்டனி நடிக்க இருக்கும் புதிய திரைப்படம் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.
இப் படத்தை விதார்த் நடித்த ‘ஆள்’ என்கிற திரைப்படத்தை இயக்கிய ஆனந்த கிருஷ்ணன் இயக்கவுள்ளார். படத்தின் நாயகியாக ஆத்மிகா நடிக்கவுள்ளார். இவர் ஹிப்ஹாப் தமிழா நடித்த ’மீசைய முறுக்கு’ படத்தில் நடித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த படத்தின் படப்பிடிப்பு நேற்று முதல் தொடங்கி இருப்பதாகவும், இந்த படத்தில் நடிக்கும் நடிகர் நடிகைகள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் குறித்த அறிவிப்பு விரைவில் அதிகாரபூர்வமாக வெளியிடப்படும் என்றும் கூறப்படுகிறது. இப்படத்துக்கு ’அன்பு இல்லையேல் ஒரு அணுவும் அசையாது’ என்ற டைட்டில் வைக்கப்பட்டுள்ளதாகவும்,விரைவி