Pichaikkaran Movie Review.
CAST:Vijay Antony, Satna Titus, Deepa, Muthuraman, Bhagavathy Perumal
DIRECTION:Sasi
GENRE:Action
DURATION:2 hours 10 minutes.
நான்,சலீம்.இந்தியா பாகிஸ்தான் படங்களைத் தொடர்ந்து விஜய் ஆண்டனி நடிப்பில் நான்காவது படமாக வெளியாகியிருப்பது பிச்சைக்காரன் இப்படத்தை இயக்குனர் ‘பூ’ சசி இயக்க, விஜய் ஆண்டனி கதாநாயகனாக நடித்து தயாரித்துள்ளார். அம்மா-மகன் பாசத்தை மையப்படுத்தி உருவாகியுள்ள படம். சுமார் ரூ. 900 கோடி சொத்துகளுக்கு ஒரே வாரிசான விஜய் ஆண்டனி. தனக்கு எல்லாமே தன் அம்மா என்று வாழ்பவர், 900 கோடி ரூபாய் சொத்துள்ள மிகப்பெரிய தொழிலதிபர் புவனேஸ்வரியின் ஒரே மகன் விஜய் ஆண்டனி.வெளிநாட்டில் படித்துவிட்டு வந்ததும் அவரிடம் மில் நிர்வாகத்தை ஒப்படைக்கிறார் அவரது அம்மா. இவரின் தொழிற்சாலையில் ஒரு நாள் எதிர்பாராத விபத்தால் விஜய் ஆண்டனி அம்மா கோமா நிலைக்கு செல்கிறார். இனி பிழைக்க மாட்டார் என மருத்துவர்கள் கைவிரித்தநிலையில், ஒரு சாமியாரை சந்திக்கிறார் விஜய் ஆண்டனி.அவர்,‘உன் அம்மா உயிர் பிழைக்க வேண்டுமென்றால் நீ ஒரு மண்டலம் (48 நாட்கள்) பிச்சைக்காரனாக வாழ வேண்டும்’ என்று சொல்வதோடு, ‘அந்த 48 நாட்களும் நீ யார் என்று காட்டிக்கொள்ளக் கூடாது’ என நிபந்தனை விதிக்கிறார். விஜய் ஆண்டனியும் அதை சபதமாக, சத்தியவாக்காக ஏற்றுக்கொண்டு பிச்சைக்காரனாக மாறுகிறார் விஜய் ஆண்டனி .அந்த 48 நாட்களில் அவர் சந்திக்கும் பிரச்னைகள், காதல் இவற்றை எப்படி எதிர் கொள்கிறார்? வேண்டுதல் நிறைவேறியதா?அம்மா உயிர் பிழைத்தாரா?என்பதே இதன் சுவாரசியமான மீதிக்கதை!
தனக்குப் பொருத்தமான கதைகளை தேர்ந்தெடுத்து நடிப்பதில் கில்லாடியான விஜய் ஆண்டனிக்கு இப்படமும் வெற்றியை தேடிக்கொடுத்துள்ளது என்றே கூறலாம்! சொல்லாமலே, டிஷ்யூம், பூ என வித்தியாசமான படங்களை கொடுத்து வரும் இயக்குநர் சசி, பிச்சைக்காரன் படத்தில் இன்னும் ஒரு புதிய பரிமாணத்தில் விஜய் ஆண்டனிக்கு நடிப்பில் புதிய பாதையைக் காட்டி இருக்கிறார். அருள் கேரக்டருக்கு மிகக் கச்சிதமாகப் பொருந்தி போயிருக்கிறார் விஜய் ஆண்டனி. என்றாலும், பிச்சைக்காரன் வேடத்திற்காக இன்னும் மெனக்கெட்டிருக்கலாம்.அறிமுக நடிகை என்று சொல்ல முடியாத படி நடித்திருக்கிறார் நாயகி சத்னா டைட்டஸ்.பிச்சைக்காரன் என்று தெரிந்தும் காதலைத் துறக்க முடியாமல் தவிக்கும் காட்சிகளில் முகத்தில் உணர்ச்சிகளை தேக்கி வைத்துக்கொள்வது இவருக்கு நல்ல எதிர்காலம் இருக்கிறது என்பதை காட்டுகிறது. பெரியப்பாவாக வரும் முத்துராமன், பிச்சைக்காரராக வரும் இயக்குநர் மூர்த்தி (எப்.எம். ரேடியோவின் நேரலையில் நாட்டில் ஊழலையும்,,கருப்பு பணத்தையும் ஒழிக்க அவர் சொல்லும் யோசனை, அரங்கில் பலத்த கைதட்டலை பெறுகிறது)ஆகியோரும் தங்களது பங்கினை சிறப்பாக செய்துள்ளனர். நண்பன் பகவதி பெருமாள், கார் டிரைவர் சிவதாணு எனச் சின்ன வேடங்களில் வருபவர்களும் அழுத்த மான முத்திரை பதிக்கிறார்கள். பிரசன்ன குமாரின் ஒளிப்பதிவும் கலை இயக்கு நரின் பங்களிப்பும் படத்துக்குப் பெரும் பங்காற்றியிருக்கின்றன. கதையோடு இணைந்த நகைச்சுவையும்,வசனங்களும் படத்திற்கு மிகப்பெரிய பலம்! மொத்தத்தில் பல லாஜிக் மீறல்கள் இருந்தாலும் பிச்சைக்காரன் நம்மை ஈர்த்து விடுகிறார் .