எந்த ஒரு நடிகராக இருந்தாலும் அவர்களை கவர்ந்த முன்னோடிகள் இருக்கவே செய்வார்கள். அவர்கள் தலைவராகவோ ,நடிகராகவோ இருப்பது ஆச்சரியமில்லை.
அதைப்போல அந்த நடிகர்களின் ரசிகர்கள் தங்களது அபிமான நடிகர்களை அந்த முன்னோடிகளைப் போல உருவகப் படுத்துவது தவறும் இல்லை.
அப்படித்தான் தளபதி விஜய்யின் தேனி ரசிகர்கள் விஜயை மக்கள் திலகம் எம்.ஜி.ஆராக உருவகப்படுத்தி போஸ்டர் அடித்து மகிழ்ந்திருக்கிறார்கள் .
இதற்கு அதிமுக அமைச்சர்கள் கண்டனம் தெரிவித்திருக்கிறார்கள்.
இது சரியா? இன்றைய அதிமுக தலைவர்கள் ,அமைச்சர்கள் சட்டைப்பையில் வைத்திருப்பது எம்.ஜி.ஆர் .படமா? யோசித்துப்பாருங்கள். அவர்கள் பையில் எம்.ஜி.ஆர் படம் இல்லை இது ஏன் ?