விஜய் நடிப்பில் உருவாகி வரும் ‘தெறி’ படத்தின் இசை வெளியீட்டுவிழா வரும் 20ஆம் தேதி நடைபெறவுள்ளதாக செய்திகள் வெளியாகி வரும் நிலையில், தற்போது இந்த படத்தில் புதிய பாடல் ஒன்றை இணைக்கப்பட்டுள்ளதாகவும், அந்த பாடலை டி.ராஜேந்தர் பாடியுள்ளதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளது. ‘ராங்கு…ராங்கு…ராங்கு…உன்னால நான் கெட்டேன்,என்னாலே நீ கெட்டே,…..வாயோடு வாயாட வாடி கிட்ட’….. எனத் தொடங்கும் டி.ராஜேந்தர் பாடிய இந்த பாடல் ஒரு அட்டகாசமான குத்துப்பாடல் என்றும், இந்த பாடல் ஏ.ஆர்.ரஹ்மானின் ரிக்கார்டிங் ஸ்டுடியோவில் சுமார் 3 மணி நேரத்தில் ஒலிப்பதிவு செய்யப்பட்டது.. இந்த பாடல் மிக அருமையாக வந்துள்ளதாக டி.ஆர்.மற்றும் ஜி.வி.பிரகாஷ்,இயக்குனர் அட்லி ஆகியோர் தங்களது மகிழ்ச்சியினையும் தெரிவித்துள்ளனர் . இப்பாடலுக்கு விஜய் குத்தாட்டம் போடும் காட்சி விரைவில் படமாக்கப்படவுள்ளதாம்.
இந்த படத்தை கலைப்புலி எஸ்.தாணு பெரும்பொருட்செலவில் தயாரித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.