வளைந்து கொடுக்கவில்லை என்றால் அந்த நடிகையை மற்ற படங்களில் நடிக்கவிடாமல் செய்துவிடுவார்கள் சில ஹீரோக்கள் .
இதுவும் ஒருவித பாலியல் வன்கொடுமைதான்.!
“என்னோடு கிஸ் பண்ணி நடிக்கமறுத்தால் உன்னை போரிங் என்றுதான் சொல்வேன்” என்கிற வன்மம் நாயக நடிகர்களுக்கு இருக்கிறது. ஆனால் வெளியில் யோக்கியர்கள் மாதிரி நடந்து கொள்வார்கள். சமீரா ரெட்டி தெரியுமா?
வாரணம் ஆயிரம், அசல், நடுநிசி நாய்கள், வெடி, வேட்டை உட்பட பல படங்களில் நடித்துள்ளவர் சமீரா ரெட்டி.இவர் இந்தி மற்றும் தெலுங்கு படங்களிலும் நடித்துள்ளார். தொழிலதிபர் அக்ஷய் வர்தே என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டு நடிப்புக்கு முழுக்கு போட்டுவிட்டார் .
சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருக்கிறார். அவரின் குழந்தைகள் மற்றும் குழந்தை வளர்ப்பு, வீடியோ மற்றும் குழந்தைகளின் புகைப்படங்களையும் பதிவிட்டு வருகிறார். சமீரா ரெட்டி ஊடகம் ஒன்றில் தனது குமுறலை கொட்டியிருக்கிறார்,
‘இந்தியில் ஒரு படத்தில் நடித்துக் கொண்டிருந்தபோது, திடீரென்று முத்தக் காட்சியில் நடிக்க வேண்டும் என்றார்கள்.
இதை ஒப்பந்தம் செய்தபோது ,முதலிலேயே சொல்லவில்லையே என்று கேட்டேன்.
நீங்கள் ஏற்கனவே முஸாஃபிர் என்ற படத்தில் நடித்திருக்கிறீர்களே? அதனால் இதிலும் அப்படி நடியுங்கள் என்றார்கள்.
ஒரு படத்தில் அப்படி செய்தால், ஒவ்வொரு படத்திலும் செய்ய வேண்டுமா? என்று கேட்டேன்.
தயவு செய்து இதைக் கவனமாக கையாளுங்கள், இல்லை என்றால் நீங்கள் மாற்றப்படலாம் என்றார்கள்.
மற்றொரு படத்தில் நடித்தபோது அந்த படத்தின் ஹீரோ, என்னை அணுக முடியாதவர் என்றும் போரிங் என்றும் சொன்னார். இனி, இவரோடு நடிக்கக் கூடாது என்றும் சொன்னார். சினிமா பரமபரத விளையாட்டு போலதான். பாம்புகளிடம் இருந்து சுற்றி நகர்ந்து நமது பாதையை அடைய தெரிந்துகொள்ள வேண்டும்”என்கிறார் சமீரா. பாவம்தான் நடிகைகள்.!