இளைய தளபதிக்கு எப்பவோ பதவி உயர்வு கொடுத்து அவரது ரசிகர்கள் ‘தளபதி’யாக கொண்டாடி வருகிறார்கள்.
அரசியலில் தளபதியாக இருந்த ஸ்டாலின் தலைவர் ஆகிவிட்டார்.
தளபதி விஜய் அடுத்து நடிக்கப்போகும் படத்துக்கு ‘தளபதி’ என்று பெயர் வைத்தால் என்ன?
மாஸ்டர் படத்தை அடுத்து , நடிகர் விஜய், இணையப்போவது இயக்கிய ஏ.ஆர். முருகதாசுடன்!
இப்படம் துப்பாக்கி படத்தின் 2 ம் பாகமாக இருக்கலாம் என்ற பேச்சு எழுந்தது
ஒளிப்பதிவாளர் சந்தோஷ் சிவன் தனது டுவிட்டர் பக்கத்தில் துப்பாக்கி படங்களின்புகைப்படங்களை பகிர்ந்தது ரசிகர்களிடையே எதிர்ப்பார்ப்பை அதிகப்படுத்தியது.
ஆனால், துப்பாக்கி 2 படம் இல்லை இது வேறு ஒரு கதை என இயக்குநர் ஏ.ஆர். முருகதாஸ் கூறி விட்டார்
அதனால் தன்னுடைய அடுத்த படத்துக்கு .அதாவது விஜய்யின் 65வது படத்திற்கு தளபதி என்கிற பெயரை வைக்க, இயக்குனர் ஏ.ஆர். முருகதாஸ் முயற்சி செய்து வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
ஏற்கனவே ‘தலைவா’ படத்திற்கே ‘தளபதி’ என்ற தலைப்பு பரிசீலனை செய்யப்பட்டு, கடைசி நேரத்தில் அந்த தலைப்பு கிடைக்காமல் போகவே தலைவா என்ற டைட்டில் வைக்கப்பட்டது. சூப்பர்ஸ்டார் ரஜினி நடித்த ஒரு படத்தின் பெயர் தளபதி என்பது குறிப்பிடத்தக்கது.