“இந்தி தெரியவில்லை என்றால் நீ இந்தியர் இல்லை என்று சொல்லுகிற அளவுக்கு இந்தி ஆதிக்கம் தலை தூக்கி இருக்கிறது.ஆளுகிற அரசு அதிகார வர்க்கத்தினரை முடுக்கி விட்டிருக்கிறது.
சென்னை விமான நிலையில் சிஐஎஸ்எப் அதிகாரி ஒருவர் திமுக எம்பி கனிமொழியை பார்த்து,”இந்தி தெரியாத நீங்கள் இந்தியரா” என்று கேள்வி கேட்டது தமிழகத்தில் கொந்தளிப்பையும் பெரும் பரபரப்பையும் ஏற்படுத்தியிருந்தது.
இந்நிலையி
இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா, நடிகர்கள் மெட்ரோ சிரிஷ், சாந்தனுபாக்யராஜ்,ஐஸ்வர்யா ராஜேஷ் உள்ளிட்ட பெரும்பாலான தமிழ்நடிகர்,நடிகைகள் இயக்குனர்கள் தங்களது எதிர்ப்பை பலரும் கவனிக்க தக்க வகையில் தங்களது சமூக வலைத்தளங்களில் வெளியிட்டு உள்ளனர்.
யுவன் சங்கர் ராஜா ‘நான் தமிழ் பேசும் இந்தியன்’ ( “ஐ யம் எ தமிழ் பேசும் இந்தியன்)” என்ற வாசகத்துடன்,திருவள்ளுவர் உருவம் பொறிக்கப்பட்ட டி சர்ட் அணிந்தும், மெட்ரோ சிரிஷ், அணிந்திருக்கும் டி சர்ட்டில் ‘இந்தி தெரியாது போடா’ என்கிற வாசகமும் பொறிக்கப்பட்ட டீசர்ட் அணிந்துள்ளனர்.
இது சமூக வலைத்தளங்களால் பெரும் வைரலாகி வருகிறது.பலரும் இவர்களுக்கு பாராட்டுகளை தெரிவித்து வருகின்றனர்.
சமீபத்தில் இயக்குநர் வெற்றிமாறனும், விமான நிலையத்தில் இந்தி தெரியாததால் அவமானப்படுத்தப்பட்டதாக கூறி இருந்ததுகுறிப்பிடத்தக்கது.