அறிமுக இயக்குநர் என்.ராஜசேகர் இயக்கத்தில் விமல்-அஞ்சலி ஆகியோர் நடித்துள்ள படம் மாப்பிள்ளை சிங்கம் இப்படம் இம்மாதம் வெளியாவதாக அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், தணிக்கைக்குழுவிற்கு அனுப்பிய மாப்பிள்ளை சிங்கத்தின் பிரிண்ட் இணையதளத்தில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தணிக்கைக் குழுவிற்கு அனுப்பும் பிரதியில் இருக்கும் டைமர் உள்பட எல்லாம் அப்படியே பதிவாகியுள்ளதாக கூறப்படுகிறது.
இவ்விவகாரம் மாப்பிள்ளை சிங்கம் படக்குழுவினரை அதிர்ச்சியில் உறையச்செய்துள்ளது.
இதற்கு முன் சரத்குமார் நடித்த ஜக்குபாய் திரைப்படமும் இதே போல் இணையத்தளத்தில் வெளியாகி பெரிய சர்ச்சையை ஏற்படுத்தியது நினைவிருக்கலாம் மேலும் கேரளாவில் மிகப்பெரிய வெற்றியை பெற்ற பிரேமம் படத்தின் சென்சார் பிரதியும் இதே போல் திருட்டு வீடியோவாக வெளியானதும் குறிப்பிடத்தக்கது.