அப்பா (எஸ்.பிபி) உடல்நிலை குறித்து திங்கள் கிழமை குட் நியூஸ் சொல்கிறேன் என கூறியிருந்த எஸ்.பிபி சரண்,இன்று வெளியிட்டுள்ள வீடியோவில், ‘கொரோனா பரிசோதனையில் அப்பாவுக்கு (எஸ்.பி.பி.) ‘நெகட்டிவ்’னு வந்துருக்கு. ஆனா வென்டிலேட்டர் உதவி அவருக்கு தேவையா இருக்கு.
அவருக்கு ஏற்பட்ட நுரையீரல் தொற்று குணமடைந்துவருகிறது. தொடர்ந்து பிசியோதெரபி சிகிச்சையும் குடுத்துகிட்டு இருக்காங்க. அப்பா, ‘ஐ’பேடில், கிரிக்கெட், டென்னிஸ் போட்டிகளையெல்லாம் பார்க்கிறார். பேச நினைப்பதை எழுதி காண்பிக்கிறார்.
இதற்கு எல்லாம் உங்களின் பிரார்த்தனைகாலம் ஆசிர்வாதங்களும் தான் காரணம் என கூறியுள்ளார்.