அரசு அல்லது போலீஸ்க்கு எதிராக குற்றம் சாட்டினால் ..?
சாட்டுகிறவர் சாதாரண ஆளாக இருந்தால் சக்கையாகிவிடுவார்.போலீஸ் அடியில் எத்தனை வகைகள் என்பதை தெரிந்து கொள்ள முடியும்.
குற்றம் சுமத்துபவர் பிரபலமாக இருந்தால் வேறு வகையான தொல்லைகள்.இவரது பழைய கற்காலம் தோண்டப்படும் !
அப்படித்தான் ஆகிவிட்டது கங்கனா ரனாவத்தின் கதையும்.!
மும்பை கார்ப்பரேஷன் அவரது கட்டிடத்துக்கு சீல் வைத்திருக்கிறது. “சட்டவிரோதமாக கட்டப்பட்டது !”
“பாலிவுட்டில் கொக்கெய்ன் ,கஞ்சா அதிகமாக புழங்குகிறது. பெரிய சினிமா பிரமுகர்களின் வீடுகளில் நடக்கிற விஷேசம் என்றால் அங்கு கொக்கெயின் வழங்கப்படும்”என்று கங்கனா பகிரங்கமாக குற்றம் சாட்டியிருந்தார். சுஷாந்த் சிங்கின் மர்ம மரணத்தில் முதல்வரின் பிள்ளைக்கும் தொடர்பு இருக்கிறது என்றும் சொல்லியிருந்தார்.
மகாராஷ்டிரா அரசு சும்மா விடுமா?
கங்கனாவுடன் நட்பில் இருந்தவர்களில் சேகர் சுமனின் மகன் அத்யாயன் சுமனும் ஒருவர். 2008 ஆம் ஆண்டு நடந்த ஒரு விருந்தினைப்பற்றி 2016 ஆம் ஆண்டில் சொல்லியிருந்த இன்டர்வியூவை மகாராஷ்டிரா அரசு நினைவு படுத்தியிருக்கிறது..!
அத்யாயன் சுமன் என்ன சொல்லியிருந்தார் அந்த பேட்டியில்.?
“மார்ச் 2008 .கங்கனாவின் பிறந்தநாள் லீலாவில் நடந்தது. அவருடன் பணியாற்றிய அனைவரையும் அழைத்திருந்தார்.
“இன்னிக்கி நைட் கொக்கெயின் அடிப்போம் “னார் கங்கனா .நான் அவருடன் சில நேரங்களில் கஞ்சா அடித்திருக்கிறேன்.அதனால் நான் கொக்கெயினை விரும்பவில்லை. அதனால் அன்னிக்கி நைட் எனக்கும் கங்கனாவுக்கு பெரிய வாக்குவாதம் நடந்ததாக நினைவு இருக்கு.” என்று அத்யாயன் சுமனின் பேட்டியை ஒரு அமைச்சர் நினைவுபடுத்தியிருக்கிறார்.
“நீ மும்பைக்குள் கால் வைக்கக்கூடாது ” என்று ஆளும் தரப்பு எம்.பி. மிரட்டியதன் விளைவாக கங்கனாவுக்கு தற்போது “ரத்த சிறப்பு காவல்படை பாதுகாப்பு வழங்கப்பட்டிருக்கிறது.
“ரன்வீர் சிங் .விக்கி கவுசல் ,ரன்பீர் கபூர் ஆகியோர் ரத்த பரிசோதனை செய்து தங்களை போதை மருந்துக்கு அடிமை இல்லை என்பதை நிரூபிக்க வேண்டும் “என்பதும் கங்கனாவின் லேட்டஸ்ட் வேண்டுகோள்.