கடந்த சில நாட்களுக்கு முன்பு பெங்களூரில் உள்ள நடிகை ராகினி வீட்டில் குற்றப்பிரிவு போலீசார் அதிரடியாக நுழைந்து சோதனை நடத்தி, அவரை கைது செய்து விசாரணை நடத்தி வந்தனர். விசாரணையில் ராகினிதிவேதி சில முக்கிய தகவல்களை தெரிவிக்க கூறப்படுகிறது. ராகினி கொடுத்த தகவலின் பேரில்,அவரது நெருங்கிய நண்பர்களான ரவிசங்கர், நடிகை நிக்கி கல்ராணியின் தங்கையும்,கன்னட நடிகையுமான சஞ்சனா கல்ராணி உள்ளிட்டோரிடமும் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வந்தனர்.
இந்நிலையில் இன்று காலை மத்திய குற்றப்பிரிவு போலீசார் கர்நாடகா மாநிலம் பெங்களூருவில் உள்ள சஞ்சனா கல்ராணி வீட்டில்அதிரடியாக நுழைந்து சோதனை மேற்கொண்டனர்.இதையடுத்து அங்கு கிடைத்த சில முக்கிய ஆவணங்கள் அடிப்படையில் உடனடியாக சஞ்சனா கைது செய்யப்பட்டார்.வீட்டில் சஞ்சனா பயன் படுத்திய லேப்டாப் பற்றும் 3 செல்போன்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.
இதையடுத்து சஞ்சனாவை போலீசார் வந்த காரிலேயேசஞ்சனாவை அழைத்து செல்ல முயன்றனர்.ஆனால்,சஞ்சனா, , உங்களுடன் நான் வரமுடியாது,என் லாயருடன் நான் என் சொந்த காரில் விசாரணைக்கு வருகிறேன் என வாக்கு வாதம் நடத்தினார். பின்னர் நீண்ட வாக்கு வாதத்தை தொடர்ந்து, போலீசார், தாங்கள் வந்த காரிலேயே சஞ்சனாவை அழைத்துச் சென்றனர்.போலீசார் விசாரணையில் சஞ்சனா சில முக்கிய தகவல்களை கூறியுள்ளதாக தெரிகிறது. இதையடுத்து மேலும் ஒரு முக்கியதமிழ் நடிகை ஒருவர் சிக்கலாம் என்கிறது போலீஸ் வட்டாரம்.