என்னமோ தெரியல. தமிழ்த் திரை உலகத்தினருக்கு தமிழின உணர்வு அதிகமாகி வருகிறது. இந்தி மொழித் திணிப்பை எதிர்த்து அமைதியான முறையில் தங்களின் கண்டனத்தைப் பதிவு செய்து வருகிறார்கள். அதிகார வர்க்கத்தின் தவறுகளை தங்களுடைய படங்களின்வழியாக சுட்டிக்காட்டி கண்டிக்க தவறுவதில்லை.தற்போது இனமான உணர்வுகளை வெளிப்படுத்தவும் செய்கிறார்கள்.
ஜெயம் ரவி நிதி,அகர்வால் நடித்துள்ள புதிய படம்’ பூமி.’
இந்த படத்தில் ரோனிட் ராய், சதீஷ், ராதாரவி, சரண்யா பொன்வண்ணன், தம்பி ராமையா உள்பட பலர் நடித்துள்ளனர்.
டட்லி ஒளிப்பதிவில் ஜான் ஆபிரகாம் படத்தொகுப்பில் உருவாகியுள்ள இந்த படத்தை இயக்குநர் லட்சுமண் இயக்கியுள்ளார். இவர் ஏற்கனவே ஜெயம் ரவி நடித்த ’ரோமியோ ஜூலியட்’ மற்றும் ’போகன்’ ஆகிய படங்களை இயக்கியவர்ஆவார்.
இப்படத்தில் இடம் பெற்றுள்ள , “தமிழன் என்று சொல்லடா தலைநிமிர்ந்து நில்லடா தரணியை நீ வெல்லடா” என்ற இந்த பாடலின் 18 வினாடி புரமோ வீடியோவை இசையமைப்பாளர் டி.இமான் வெளியிட்டிருக்கிறார் .
இசையமைப்பாளர் அனிருத் பாடுகிற இந்த வீடியோ தற்போது வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.