தமிழ் படங்களில் நடிக்கும் நடிகைகளில் தமிழில் சரளமாக பேசி நடிக்கும் நடிகைகள் மிக குறைவு. பலவேறு விளம்பர படங்களில் நடித்து ரசிகர்களிடம் நன்கு பரிச்சயமான தீக்ஷிதா , தமிழில் சரளமாக பேசி , சென்னையிலே வசிக்கும் தமிழ் பெண் ஆவார். ‘ஆகம் ‘ திரைப்படத்தில் இர்பானுக்கு இணையாக கதா நாயகியாக நடிக்கும் தீக்ஷிதா படத்தின் மையக் கருத்தை பற்றி தனதுக் கருத்தை தெளிவாக கூறனார்.
‘ நமது நாட்டில் பிறந்து நமது அரசாங்கத்தின் சலுகைகளை அனுபவித்து, பிறகு வெளி நாட்டில் வேலை தேடி அங்கு பறந்து சென்று தன்னுடைய அறிவை வெளி நாட்டுக்கு விற்பவர்களை பற்றிய கதை. அடிப்படையில் நான் கூட ஒரு பொறியியல் கல்லூரியில் கம்ப்யூட்டர் பயிற்சி பயின்றவள் தான். என் சக மாணவர்களைப் போலவே எனக்கும் கல்வி முடிந்தவுடன் வெளி நாட்டுக்கு சென்று செட்டில் ஆக வேண்டும் என்ற ஆசைதான். அதற்கு எனது பெற்றோர்கள் தடையாக இருந்தனர் இதற்காக நான் முதலில் சிறிது வருத்தப் பட்டாலும் இன்று ஆகம் படத்தின் கதையை கேட்ட பிறகு , படத்தில் நடித்த பிறகு எனது பெற்றோரின் முடிவு சரியானதுதான் என்றுத் தோன்றுகிறது.ஆகம் வெளி வந்தப் பின்னர் என்னுள் ஏற்பட்ட மாற்றம் படம் பார்க்கும் எல்லோருக்கும் தோன்றும் எனத் தோன்றுகிறது.
‘ஆகம் ‘ படத்தில் நான் மிகவும் இயல்பான ஒரு வேடத்தில் நடித்து இருக்கிறேன்.இந்தப் படத்தில் அனுபவமிக்க சில நடிகர்களுடன் நடித்து இருப்பது மிக்க மகிழ்ச்சி. ஜே பி சார் ஒரு நடமாடும் அறிவுக் களஞ்சியம். ரியாஸ் சார் இன்றும் எல்லோரையும் பிரமிக்க வைக்கும் வகையில் என்றும் இளமையாக fit ஆக இருக்கிறார். fitness பற்றி அவர் பேசினால் இன்றெல்லாம் கேட்டுக் கொண்டே இருக்கலாம்.என் கதாநாயகன் இர்பான் எனக்கு பல நாட்களாகவே பழக்கம். அவருடைய நடன திறமைக்கும், நகைசுவை உணர்ச்சிக்கும் இன்னமும் உயரத்துக்கு அவர் செல்வார் என்பதில் சந்தேகம் இல்லை’ என்றார்.