உலக நாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய சின்னத்திரை நிகழ்ச்சி மூலம் பிரபலமானவர் நடிகை லாஸ்லியா.
கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங்குடன் ஜோடி சேர்ந்து ‘ப்ரண்ட்ஷிப்’ என்கிற படத்தில் கதாநாயகியாக நடித்து வருகிறார். தொடர்ந்து நடிகர் ஆரியுடன் பெயரிடப்படாத படம் ஒன்றிலும் கமிட்டாகியுள்ளார்.
சமூக வலைதளங்களிலும் மிகவும் ஆர்வம் காட்டி வரும் லாஸ்லியா, சமீபத்தில் தனது வலைதள பக்கத்தில்,தனது போட்டோ ஷுட் புகைப்படங்களை பதிவிட்ட அவர், அதில்,”நான் வாழ்ந்தேன், காதலித்தேன், இழந்தேன், பிரிவை சந்தித்தேன், காயப்பட்டேன், நம்பிக்கை வைத்தேன், சில தவறுகளையும் செய்தேன். ஆனால் இவை எல்லாவற்றிற்கும் மேலாக நான் பாடங்களை கற்றேன்” என்று கூறியுள்ளார்.
இதனை பார்த்த நெட்டிசன்கள் பிக்பாஸ் வீட்டில் கவினை காதலித்ததையா கூறுகிறீர்கள் என கேட்டுள்ளனர். நடிகை லாஸ்லியா சின்னத்திரை நிகழ்ச்சியில் பங்கேற்றிருந்த போது சக போட்டியாளரான கவினை காதலித்தார். கவினுடனான லாஸ்லியாவின் காதல் அவரது பெற்றோருக்கு பிடிக்காத போதும், கவினுடனான காதலை அவர் தொடர்ந்து வந்தார்.கவின் அந்த நிகழ்ச்சியில் இருந்து வெளியேறிய போதுகூட, தன்னையும் நிகழ்ச்சியில் இருந்து வெளியேற்றும்படி கதறி அழுது கெஞ்சியது குறிப்பிடத்தக்கது.