கல்கியின் பொன்னியின் செல்வன் என்ன ராசியோ தெரியாது…மக்கள் திலகம் ,உலகநாயகன் ஆகியோரிடம் சிக்கவில்லை. இயக்குநர் மணிரத்னத்திடம் வந்து மாட்டினான் .ஒரு செடியூலும் முடிந்தது.!
அப்பாடா என்று நிம்மதி பெருமூச்சு விட்டு தாடியை நீவிக்கொண்டவர்களுக்கு கொரானா என்பது இடையூறாக வந்து தொலைத்தது.
அடுத்தகட்ட படப்பிடிப்பு, கொரோனா தடுப்பூசி பயன்பாட்டுக்கு வந்த பின்னர் 2021 மார்ச் மாதம் இறுதியில் தொடங்க திட்டமிடப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
மேலும் இப்படப்பிடிப்புக்கு பிரமாண்ட அரங்குகள் மற்றும் சில காட்சிகளில் குறைந்த பட்சம் 300 பேராவது தேவை என்பதால் அதி நவீன சிஜி வேலைகளும் இப்பட த்தில் முதன் முறையாக பயன்படுத்தப்பட்ட உள்ளதாம்
இப்படத்தில்,விக்ரம் ஆதித்த கரிகாலனாகவும், ஜெயம் ரவி அருள்மொழிவர்மனாகவும், கார்த்தி வந்தியத்தேவனாகவும், சரத்குமார் பெரிய பழுவேட்டரையராகவும் , ஐஸ்வர்யா ராய் நந்தினியாகவும், திரிஷா குந்தவையாகவும்,ஐஸ்வர்யா லட்சுமி பூங்குழலியாகவும், ஜெயராம் ஆழ்வார்க்கடியான் நம்பியாகவும்,ரகுமான் பெரிய வல்லவராயனாகவும்,பிரபு அனிருத்த பிரம்மராயராகவும்,அஷ்வின் காகமனு கந்தமாறனாகவும் நடிக்கவிருப்பதாக சொல்கிறார்கள்.
, விக்ரம் பிரபு சேந்தன் அமுதன் வேடத்திலும் நடிக்க உள்ளதாக கூறப்படும் நிலையில்,நடிகர் மோகன்ராம் இப்படத்தில்,குடந்தை ஜோசியர் கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளதாகவும் கூறப்படுகிறது.