கொரோனா லாக்டவுன் காரணமாக கடந்த 5 மாதங்களுக்கும் மேலாக நேரடி நிகழ்ச்சிகள் ஏதும் நடக்காததால், பல பாடகர்கள் மற்றும் இசைக் கலைஞர்களின் வாழ்வாதாரம் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது.
அவர்களுக்காக நிதி திரட்டி உதவுவதற்காக ‘ பின்னணிப் பாடகர்.ஸ்ரீனிவாஸ் தலைமையிலான அமைப்பு,”ஒரு குரலாய்” என்கிற பிரமாண்டமான காணொளி இசை நிகழ்ச்சியை ஆறுமணி நேரம் நேரலையாக நிகழ்த்த இருக்கிறது.
பிரபல பாடகர்கள்,இசைக் கலைஞர்கள் என்று எண்பதுக்கும் மேற்பட்டவர்கள் பங்கேற்கும் இந்த இசை நிகழ்வில் பங்கேற்று இசையுடன் தன் அனுபவத்தைப் பகிர்ந்து கொள்ள இருக்கிறார்கள்.
ஏ.ஆர்.ரஹ்மான் மற்றும் கமல் ஹாசன் கலந்துகொண்டு பல இசைக்கலைஞர்களை நினைவுக்கூர்ந்து திரையில் அவருடைய குரலில் பாடிய பாடல்களைப் பாட இருக்கிறார்.
இவர்களுடன் பிரபல பாடகர்கள், இசையமைப்பாளர்கள் மற்றும் திரையுலகப் பிரபலங்கள் பலரும் பங்கேற்று பங்கேற்பாளர்களுடன் உரையாட உள்ளனர்.இந்த அமைப்பில்,பாடகர்கள் உன்னி கிருஷ்ணன், சுஜாதா மோகன், ராகுல் நம்பியார், ரஞ்சித் கோவிந்த், .ஹரிசரண், சைந்தவி ஜி.வி.பிரகாஷ் ஆகியோர் அறங்காவலர்களாக உள்ளனர்.