அஜித்தின் ‘வேதாளம்’, விக்ரமின் ‘கடாரம் கொண்டான்’ ஆகிய படங்களைத் தொடர்ந்து கமல்ஹாசனின் இளைய மகள் அக்சராஹாசன்,இயக்குனர் ராஜமூர்த்தி இயக்கத்தில் உருவாகும் புதிய படமொன்றில் கதையின் நாயகியாக நடிக்கிறார்.
,இந்த படத்தில் பழம்பெரும் பாலிவுட் பாடகி உஷா உதுப், அக்சராஹாசனின் பாட்டியாக நடிக்க இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
உஷா உதுப் ஏற்கனவே கமல்ஹாசன் நடித்த ‘மன்மதன் அம்பு’ திரைப்படத்தில் நடித்திருக்கிறார் .
இயக்குனர் ராஜமூர்த்தி கூறியிருப்பதாவது: இத்தருணம் மிகப்பெரும் பெருமை தரக்கூடியது. கிட்டத்தட்ட 10 வருடத்திற்கு பிறகு ஒரு தமிழ் படத்தில் அதுவும் எங்கள் படம் மூலம் அவரை தமிழில் நடிக்க அழைத்து வருவது எங்களுக்கு பெருமையே இந்த படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்க உள்ளதாகவும் கூறியுள்ளார்.