மாட்டு மூத்திரத்தை நேசித்து குடிப்பவர்களும் இருக்கிறார்கள். பாஜக கட்சியில் இருப்பவர்கள் கோமியம் குடிப்பதை ஆதரிக்கிறார்கள்.அவர்கள் பசுவை கோமாதாவாக வணங்கி வருகிறார்கள்.
பிரபல பாலிவுட் நடிகர் அக்சய் குமார் தனக்கு மாட்டு மூத்திரம் குடிக்கிற பழக்கம் இருப்பதை பகிரங்கமாக ஒத்துக் கொண்டிருக்கிறார்.
டிஸ்கவரி சேனல் நடத்தும் ’மேன் வெர்ஸஸ் வைல்ட்’ என்ற நிகழ்ச்சியில் அக்சயகுமார் கலந்து கொண்டார். அந்த டீசரை அக்சய் குமார் தனது சமூக வலைத்தளத்தில் பகிர்ந்து, இந்நிகழ்ச்சியின்போது யானைச்சாணத்தில் பியர்ல் கிரில்ஸ் தனக்கு டீ போட்டு கொடுத்ததாக குறிப்பிட்டிருந்தார் , “அது குறித்து நான் எந்தவித கவலையும் படவில்லை. ஏனெனில் நான் தினமும் ஆரோக்கியத்துக்காக மாட்டு கோமியத்தையே குடித்து வருகிறேன்” என்றார் .