‘தூங்கா நகரம்’, ‘கலகலப்பு’ படங்களைத் தொடர்ந்து விமல் – அஞ்சலி இருவரும் இப்போது 3-வது முறையாக ‘மாப்ள சிங்கம்’ படத்தில் ஜோடி சேர்ந்து நடித்துள்ளனர்.இப்படம் தொடர்பாக நடந்த பத்திரிகையாளர் சந்திப்பில்,அஞ்சலி கூறியதாவது,, “விமல் என்னுடைய நீண்ட கால நண்பர் பழகுவதற்கு மிகவும் இனிமையானவர் என்னை நன்றாக புரிந்து கொண்டவர் .அவருடன் மூன்றாவது முறையாக ஜோடி சேர்ந்து நடிக்கிறேன். படப்பிடிப்பின்போது உடன் நடிப்பவர்களுக்கு மிகுந்த ஒத்துழைப்பு கொடுத்து நடிப்பார்.
என்னை நயன்தாராவுக்கு போட்டியாக தயாரிப்பாளர்கள் உருவாக்குகிறார்கள் என்று பேசப்படுவதில் எனக்கு வருத்தம் எதுவும் இல்லை, சந்தோஷம்தான். போட்டி இருந்தால்தான், ஆரோக்கியமாக இருக்கும். எனக்கு நிறைய பட வாய்ப்பு வருவது உண்மைதான். அவற்றில் நல்ல கதையம்சமும், எனக்கு முக்கியத்துவம் தரும் கதாபாத்திரங்களும் உள்ள படங்களை மட்டும் தேர்ந்தெடுத்து நடிக்கிறேன்.நான் தற்போது, என் உடல் எடையை இதுவரை 6 கிலோ எடையை குறைத்து இருக்கிறேன். இன்னும் கொஞ்சம் மெலியவேண்டும் என்று நினைத்துள்ளேன்.தமிழில் இப்போது ‘இறைவி’, ‘பேரன்பு’, ‘தரமணி’, ‘காண்பது பொய்’ ஆகிய படங்களில் நடிக்கிறேன். இதில் ‘காண்பது பொய்’ திகில் படம். ஆனால் பேய் படம் அல்ல. தொடர்ந்து நல்ல கதையம்சம் உள்ள படங்களில் நடிப்பேன்..” என்றார் அஞ்சலி.
இதையடுத்து விமல் பேசும்போது, “இந்த ‘மாப்ள சிங்கம்’ படம் ஜனரஞ்சகமான, கதையம்சம் கொண்ட படம். காதலும், நகைச்சுவையும் கலந்த கதை. கொஞ்சம் அரசியலும் இருக்கிறது. இதில் நான் பஞ்சாயத்து தலைவரின் மகனாக நடிக்கிறேன். படத்தின் கதைப்படி நானும், அஞ்சலியும் ஒரு பிரச்சினையில் மாட்டிக்கொள்கிறோம். அதிலிருந்து எப்படி இருவரும் வெளியே வருகிறோம் என்பதுதான் கதை. அது என்ன பிரச்சினைறதை படத்துல பார்த்து தெரிஞ்சுக்குங்க.என்று கூறினார்.