சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் தற்போது சிறுத்தை சிவா இயக்கத்தில் உருவாகி வரும் அண்ணாத்த. படத்தில் நடித்து வருகிறார்.
,நடிகைகள் குஷ்பூ, மீனா ,கீர்த்தி சுரேஷ்,நயன்தாரா நடிகர்கள் பிரகாஷ் ராஜ்,சூரி,சதிஷ்,ஜார்ஜ் மரியான் உள்பட முன்னணி நடிகர் நடிகைகள் பலரும் நடித்து வருகின்றனர்.
இப்படத்தின் வில்லன்கள் பிரகாஷ் ராஜ் மற்றும் வேல ராமமூர்த்தி என்கிறார்கள். தற்போதெல்லாம் யார் யாருக்கு என்ன வேடங்கள் என்பதெல்லாம் பூதம் காக்கும் ரகசியங்கள்.!
கிராமத்து கதையாக உருவாகும் இப்படத்தில் ரஜினியுடன் மோதும் முக்கிய வில்லனாக பிரபல பாலிவுட் நடிகர் ஜாக்கி ஷெராப் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியது..அப்ப மற்ற வில்லன்கள் எல்லாம் உப்புக்கு சப்பாணி மாதிரியா ?சிறுத்தையை தான் கேட்க வேண்டும்.
லாக்டவுன் தளர்வு காரணமாக மீண்டும் படப்பிடிப்புக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ள நிலையில், விரைவில் தொடங்கப்படவுள்ள இப்படத்தின் படப்பிடிப்புக்காக, ஈ.சி.ஆரில் அரங்கம் அமைக்கும் பணிகள் மிக வேகமாக நடந்து வருகிறது.
முதலில் கீர்த்தி சுரேஷ் மற்றும் நயன்தாரா சம்பந்தப்பட்ட காட்சிகள் படமாக்கப்படும் என்று கூறப்படுகிறது.மேலும் இப்படத்தில் தற்போது இணைந்துள்ள ஜாக்கி ஷெராப் சம்பந்தப்பட்ட ரஜினிக்காந்த் இல்லாத காட்சிகளை ஜனவரிக்குள் முடித்து விட படக்குழு திட்டமிட்டுள்ளதாம்.
ரஜினிகாந்துடன் ஜாக்கி ஷெராப் இணைந்து நடிக்கும் காட்சிகள் ஜனவரியில் படமாக்கப்படும் என்றும் கூறப்படுகிறது.ஏற்கனவே ரஜினிகாந்த் தனது 50 சதவீத காட்சிகளை முடித்து விட்ட நிலையில், எஞ்சியுள்ள காட்சிகள் மட்டுமே ஜனவரியில் படமாக்கப்பட உள்ளதாகவும் கூறப்படுகிறது.