மெது மெதுவாக சுஷாந்த் மர்ம மரணம் பின்னுக்குப் போய்க் கொண்டிருக்கிறது. சி.பி.ஐ .விசாரணை என்பதால் அது எத்தனை நாளைக்கு இழுக்கும் என்பது தெரியாது. தூத்துக்குடி வியாபாரிகளை போலீஸ் அடித்துக்கொலை செய்த வழக்கின் நிலைதான் இதற்கும்.! இப்போது வடை சட்டியாக எண்ணெய் கொதிப்பது பாலிவுட் போதைப்பொருள் விவகாரம்தான்.!
தற்போது வம்புக்கு வந்து வண்டியில் ஏறி குமுறத் தொடங்கி இருப்பது ஊர்மிளா மடோன்கர்.
“எப்படி என்னுடைய மும்பையை கொக்கெய்ன் சிட்டி என்று கங்கனா சொல்லலாம் ?”என்று கேட்டு இத்தனை நாள் கழித்து வந்து பொங்கியிருக்கிறார்.
” போதை மருந்துக்கு எதிரான போராட்டத்தை கங்கனா தனது சொந்த மாநிலமான ஹிமாச்சல்லில் இருந்து ஆரம்பிக்க வேண்டும். ஒட்டுமொத்த நாடும் போதை பொருள் அச்சுறுத்தலை சந்தித்து வருகிறது.
பாலிவுட் போதை பொருள்களின் ஊற்றுக்கண்ணே ஹிமாச்சல்லில் இருந்துதான் என்பது கங்கனாவுக்கு தெரியாதா என்ன? ?
எனவே போதை மருந்தை ஒழிக்க அவர் சொந்த மாநிலத்திலிருந்துதான் தொடங்க வேண்டும். மும்பை குறித்தும் பாலிவுட் குறித்தும் அருவருக்கத்தக்க கருத்தை கங்கனா தெரிவித்திருக்கிறார் .அவர் சொல்வதெல்லாம் உண்மை என்பதல்ல!
. மும்பையின் மகளான என்னால் அந்த நகரத்திற்கு எதிரான அவமதிப்பு கருத்துகள் சொல்வதை பொறுத்துக் கொள்ள முடியாது. அந்த நகரத்தை மட்டுமல்ல, அந்த நகர மக்கள் அனைவரையும் நீங்கள் அவமரியாதை செய்கிறீர்கள் . ஒருவர் எப்போதும் கத்திக் கொண்டே இருந்தால், அவர் சொல்வதெல்லாம் உண்மை ஆகிவிடுமா ?”என்று கேட்டிருக்கிறார் ஊர்மிளா
சபாஷ் சரியான போட்டி!
பாஜக இறக்கியது கங்கனாவை என்றால் காங்கிரஸ் இறங்கியிருப்பது ஊர்மிளாவை!