அலம்பல் தாங்கமுடியல. இப்பத்தான் இந்தி திணிப்பு ,சாதி மறுப்பு இவைகளை கண்டித்து ஆண்கள் டி சர்ட் போட்டு எதிர்ப்புத் தெரிவித்து வருகிறார்கள். தமிழகத்தில் அதிக அளவில் விற்பனையாகி வருகிறது.
இந்த நிலையில் சிலர் என்ன நினைத்தார்களோ .சிக்கினால் வச்சு செய்யலாம் என்று காத்திருந்தார்கள் போலிருக்கிறது. மர்மமாக இறந்த நடிகர் சுஷாந்த் சிங்கின் முன்னாள் காதலியாக இருந்த அங்கிதா கதவு இடுக்கில் சிக்கிக்கொண்டிருக்கிறார். அண்மையில் அவர் வெளியிட்ட படத்தில் மஞ்சள் கலரில் பைஜாமா (பாலஜா )அணிந்திருக்கிறார் .அதில் சம்ஸ்கிருத எழுத்தில் ஓம் என்கிற எழுத்து பிரிண்ட் ஆகி இருக்கிறது.
“எப்படி இழிவு படுத்தலாம் ஓம் என்கிற புனித எழுத்தை ? கால் பாதம் வரை தொடுகிறதே “என்று கேட்டு கண்டனங்களை தெரிவித்துவருகிறார்கள் இந்து மத ஆதரவாளர்கள்.
பாவம் அங்கிதா .இந்த மஞ்சள் நிற பைஜாமா இப்படி ஒரு சிக்கலில் மாற்றிவிடும் என்று என்பதை நினைத்துப்பார்த்திருக்க மாட்டார். சிக்கலிலும் சிலர் அங்கிதாவுக்கு ஆதரவாக இருக்கிறார்கள்.