மாநகரம், கைதி படங்களைத் தொடர்ந்து இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், விஜய் நடிப்பில் உருவாகியுள்ள மாஸ்டர், வரும் தீபாவளிக்கு திரையரங்குகளில் வெளியிட முடிவு செய்யப்பட்டுள்ளதாக கூறப்படும் நிலையில்,இயக்குநர் லோகேஷ் கனகராஜ் தனது அடுத்தப்படம் குறித்து ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.
இதுகுறித்து இவர் வெளியிட்டுள்ள பதிவில், ”எனது அடுத்தப்படம் பற்றிய அறிவிப்பை வெளியிடுவதில் மகிழ்ச்சி கொள்கிறேன். நாளை மாலை ஆறு மணிக்கு, இந்த அறிவிப்பு வரும்” என அவர் நேற்று கூறியிருந்தார். .
இந்நிலையில் தற்போது கமல்ஹாசன் நடிக்கும் படத்தை இயக்கவுள்ளதாகவும்,ஆண்டவருக்கு நன்றி என்றும் லோகேஷுகனகராஜ் பதிவிட்டுள்ளார். அந்தப் படத்திற்கு ‘எவனென்று நினைத்தாய்’ என தலைப்பு வைக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிபட்டுள்ளது. இது கமல்ஹாசனின் 232 வது படமாகும்.கமலின் ரசிகர்கள் பலரும் தங்களின் டிவிட்டர் பக்கத்தில் இத்தகவலை பகிர்ந்து வருகின்றனர்.