“பாலிவுட் நடிகர்களில் பெரும்பான்மையான ஹீரோக்கள் போதை மருந்து பழக்கம் உள்ளவர்கள்தான்”என்று கங்கனா ரனாவத் சொன்னது அவரை மிகப்பெரிய துரோகியாக சித்தரித்துக் கொண்டிருக்கிறது பாலிவுட். இந்த பிரச்னை பாராளுமன்றத்திலும் எதிரொலித்திருக்கிறது.
எதிரொலித்தவர் சமாஜ்வாடி கட்சி எம்.பி. யான ஜெயா பச்சன் .இந்தியாவின் உச்ச நடிகர் அமிதாப் பச்சனின் மனைவி. இவரது மகன் பாலிவுட்டில் முக்கிய ஹீரோ. மருமகள் ஐஸ்வர்யா ராய் முன்னணி நடிகை. இதனால்தானோ என்னவோ ” சோறு போடுகிற சினிமாவை பற்றி சிலர் கேவலமாக பேசி வருகிறார்கள்” என்று கங்கனாவின் பெயர் சொல்லாமலேயே தாக்கிப்பேசி இருந்தார் .
ஆத்திரம் வராமல் இருக்குமா ? வந்தது.
ஒரு உண்மையும் சேர்ந்தே வந்தது.!
“ஜெயா ஜி.! எதை சொல்கிறீர்கள்? எனக்கு வாய்ப்பளித்த இரண்டு நிமிடம் வந்து போகும் அயிட்டம் டான்ஸ் ,காதல் சீன் கிடைத்தது கூட அந்த ஹீரோவுடன் ‘படுத்தபின் ‘ கிடைத்த வாய்ப்புதான் !நான் பெண்ணியம் பேசுகிறேன்.” என்று செவிட்டில் அடித்த மாதிரி சொல்லியிருக்கிறார் கங்கனா .