தமிழ் மற்றும் மலையாளத்தில் சைலென்ஸ் என்ற பெயரில் இப்படம் 2020, அக்டோபர் 2 ஆம் தேதி அமேசான் ப்ரைம் வீடியோவில் 3 மொழிகளில் உலகளவில் வெளியாகவுள்ளது..
ஹேமந்த் மதுகர் இயக்கத்தில், டி.ஜி. விஷ்வ பிரசாத் தயாரிப்பில் உருவாகியுள்ள நிஷப்தம் திரைப்படத்தில் ஆர். மாதவன், அனுஷ்கா ஷெட்டி, அஞ்சலி ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். அமேசான் ப்ரைமின் சமீபத்திய மற்றும் பிரத்யேக திரைப்படங்கள், டிவி நிகழ்ச்சிகள், ஸ்டாண்ட்-அப் காமெடிகள், அமேசான்ஒரிஜினல்ஸ், அமேசான் ப்ரைம் மியூசிக்கில்விளம்பரமில்லா இசை,இந்தியா முழுவதும் தேர்ந்தெடுக்கப்பட்ட தயாரிப்புக்களின் விரைவானடெலிவரி, டாப்டீல்களை உடனடியாக பெறுதல், பிரைம் ரீடிங்கில் வரம்பற்ற வாசிப்பு மற்றும் பிரைம் கேமிங்கண்டெண்ட் அனைத்தும் ஒரு மாதத்திற்கு ரூ.129 ரூபாயில் பெறலாம்.
மும்பை, இந்தியா, 17 செப்டம்பர்2020 – அமேசான் ப்ரைம் வீடியோ இன்று தெலுங்கு, தமிழ் மற்றும் மலையாளத்தில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட நிஷப்தம்/சைலென்ஸ் திரைப்படத்தின் முதல்-நேரடி-சேவையின் உலகளவிலான பிரீமியரை அறிவித்தது.
கோனா பிலிம்கார்ப்பரேஷனுடன் இணைந்து பீப்பிள் மீடியா கார்ப்ரேஷன் டி.ஜி. விஷ்வா பிரசாத் தயாரிப்பில், ஹேமந்த் மதுகர் இயக்கிய படம்.
பேச்சு மற்றும் செவித்திறன் குறைபாடுள்ள கலைஞர், பிரபல-இசைக்கலைஞராக உள்ள அவரது கணவர் மற்றும் அவரது சிறந்த நண்பர் விசித்திரமான முறையில் காணாமல் போகிறார். இதை சுற்றி நகரும் ஒரு கதைக்களத்தை கொண்ட் சஸ்பென்ஸ் த்ரில்லர் ஆகும் நிசப்தம்
. இந்த சஸ்பென்ஸ் த்ரில்லர் படத்தில் அனுஷ்கா , ஆர். மாதவன் மற்றும் அஞ்சலி ஷாலினி பாண்டே, சுப்பராஜு மற்றும் ஸ்ரீனிவாஸ் அவசரலா இணைந்து முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.
மைக்கேல் மேட்சனுக்கு இந்திய சினிமாவில் இதுமுதல் படமாக அமையும் (ஒன்ஸ் அப்பான் எடைம் இன் ஹாலிவுட், கில் பில், ரிசர்வயர் டாக்ஸ்). இந்தியாவிலும் 200 க்கும் மேற்பட்ட நாடுகளிலும் பிராந்தியங்களிலும் உள்ள ப்ரைம் உறுப்பினர்கள் அக்டோபர் 2 முதல் அமேசான் ப்ரைம்வீடியோவில் படத்தை ஸ்ட்ரீம் செய்யலாம்.
“அமேசான் ப்ரைம் வீடியோ இந்தியாவின், கண்டென்ட், இயக்குநரும் தலைவருமான விஜய் சுப்பிரமணியம் கூறுகையில், “சமீபத்தில் வெளியான நேரடி-டிஜிட்டல் படங்களின் வெற்றிகரமான உலகளாவிய பிரீமியர்ஸ், நல்ல கதைகள் எப்போதும் மொழித் தடைகளையும் கடந்து பயணிக்கும் என்பதை நிரூபித்துள்ளன. சூப்பர் ஸ்டார்களான ஆர். மாதவன் மற்றும் அனுஷ்கா ஷெட்டி ஆகியோர் எங்கள் வாடிக்கையாளர்களுக்காக நிஷப்தம் / சைலென்ஸ் படத்தின் மூலம் திரையில் ஒன்றாக தோன்றப் போகிறார்கள் என்பதில் மகிழ்ச்சியடைகிறோம் .
இந்த படம் டிஜிட்டல் தளத்தில் அனுஷ்காவின் அறிமுகத்தைக் குறிக்கும் மற்றும் அமேசான் அசல் தொடரான ப்ரீத்தின் சூப்பர் ஹிட் சீசன் 1 க்குப் பிறகு ஆர். மாதவனையும் மீண்டும் பிரைம் வீடியோவுக்குஅழைத்து வந்திருக்கிறது. 14 ஆண்டுகளுக்குப் பிறகு மிகவும் பிரபலமான நடிகர்கள் மீண்டும் திரையில் தோன்றுகிறார்கள் .பார்வையாளர்களிடம் கொண்டு வருவதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம்” என்று இயக்குனர் ஹேமந்த் மதுகர் கூறினார்.
“நான் இதுவரை நடித்த மற்ற கதாபாத்திரத்துடன் ஒப்பிடும்போது சாக்ஷி எனக்கு மிகவும் புதிய கதாபாத்திரம்” என்று நிஷப்தம் நடிகை அனுஷ்கா கூறினார்.
.“நான் த்ரில்லர் படங்களின் ஒரு பகுதியாக இருப்பதையும் அதைபார்ப்பதையும் ரசிக்கிறேன். நிஷப்தம் நிச்சயமாக நான் இணைந்திருக்கும் மிகவும்சுவாரஸ்யமான திரைப்படங்களில் ஒன்றாகும், ”என்று .மாதவன் கூறினார்.
குலாபோ சிட்டாபோ, சகுந்தலா தேவி, பொன்மகள் வந்தாள், லா, சி யூ சூன், வி, பிரஞ்சு பிரியாணி, சுஃபியும்சுஜாதாவும் மற்றும் பென்குயின் ஆகியவை இதற்கு முன்னர் வெளியானவை . அமேசான் ப்ரைம் உறுப்பினர்கள் கூடுதலாக இதற்கு செலவழிக்க தேவையில்லை. இந்த சேவையில் ஹிந்தி, மராத்தி, குஜராத்தி, தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், பஞ்சாபி மற்றும் பெங்காலி மொழிகளிலும் உள்ளன.