கடந்த சில வருடங்களாக கோலிவுட்டின் காதல் பறவைகளாகவே (? ) சிறகடித்து பறந்து திரியும் நயன்-விக்கி ஜோடியில் இன்று விக்னேஷ் சிவனுக்கு பிறந்தநாள்.பிறந்த நாளுக்கு முன்னதாகவே கோவா பறந்து விட்ட இந்த ஜோடி அங்கு புதுமணத்தம்பதிகள் தங்களது தேனிலவை கொண்டாடி மகிழ்வதைப்போலவே பிறந்தநாள் விழாவை கொண்டாடி மகிழ்ந்து வருகின்றனர்.
‘ சும்மாவே ‘செல்பி’ எடுத்து டுவிட்டரில் தெறிக்க விடும் இவர்களின் பிறந்தநாள் கொண்டாட்டம் ‘செல்பி’ இல்லாமலா? இருவரும் ஒருவரையொருவர் அணைத்தபடி செல்லும் ரொமான்டிக் புகைப்படத்தை பகிர்ந்துள்ளனர்.அதுவும் வழக்கம் போலவே நயனின் ரசிகர்களால் இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. விக்னேஷ் சிவனின் டி ஷர்ட்டில் பொறிக்கப்பட்டுள்ள வாசகம் இது தான்! GOOD TIMES START NOW…….