சமூகவலைதளங்களில் ஆக்டிவாக இருந்து வரும் நடிகர்களில் இயக்குனர் நடிகர் சேரனும் ஒருவர்.கடந்த சில மாதங்களுக்கு முன், மின் கட்டணம் தொடர்பாக கடுமையாக குரல் எழுப்பி இருந்தார். சமூக வலைதளங்களில் இவ்விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது. தொடர்ந்து திரையுலகம் மற்றும் நீட் விவகாரம் உள்ளிட்ட பல்வேறு பிரச்னைகள் குறித்தும் கருத்துகளை பதிவிட்டு வந்தார். இதற்கு சிலர் எதிர்ப்புகளும், பலர் ஆதரவாகவும் கருத்து கூறியிருந்தனர்.
இந்நிலையில் சேரன் தனது டுவிட்டரில், “எனது டுவிட்டர் கணக்கை யாரோ ஹேக் செய்ய முயற்சிக்கிறார்கள் .. எனவே அவர்கள் விருப்பப்படி எனது வெரிஃபைட் பேட்ஜ் நீக்கப்பட்டிருக்கிறது.சரிபார்க்கப்பட்ட பேட்ஜ் அவர்களின் விருப்பமாக நீக்கப்பட்டுள்ளது .. ஹஹாஹா … எனது டுவிட்டர் கணக்கிலிருந்து தேவையற்ற செய்திகள் ஏதும் வந்தால், அது என்னுடையது அல்ல.தயவுசெய்து கவனமாக இந்த முட்டாள்களிடமிருந்து விலகி இருங்கள்”என பதிவிட்டுள்ளார்.