எஸ்.பிபி உடல் நிலை குறித்து அவரது மகன் எஸ்பிபி சரண் இன்று மாலை வெளியிட்ட வீடியோவில் கூறியுள்ளதாவது,பதிவில் கூறியிருப்பதாவது,
“அப்பாவின் உடல்நிலை மிகவும் சீராக இருந்து வருகிறது. இன்னும் எக்மோ மற்றும் செயற்கை சுவாச உதவிக்கான கருவிகளுடன் இருந்து வருகிறார். அவரது மற்ற செயல்பாடுகள் அனைத்தும் நன்றாக உள்ளன. தொற்று எதுவும் இல்லை. நுரையீரல் செயல்பாடு, சுவாசம் மற்றும் உடல் வலிமையில் இன்னும் முன்னேற்றம் தேவைப்படுகிறது. பிசியோதெரபி சிகிச்சைக்கும் 10 லிருந்து 15 நிமிடங்கள் நன்றாகவே ஒத்துழைப்பு கொடுத்து வருகிறார். அவரால் இப்போது 10 லிருந்து 15 நிமிடங்கள் உட்கார முடிகிறது. மருத்துவர்களும், செவிலியர்களும் அவரை நன்கு கவனித்து கொள்கின்றனர்.
மேலும், அப்பா நேற்று முதல் வாய்வழியே சாப்பிட ஆரம்பித்திருக்கிறார். இன்று இரண்டாவது நாளாக தொடர்கிறது.இது அவரது உடல் வலுப்பெற உதவும் என நம்புகிறேன்.இதற்கு உங்களின் பிராத்தனையே காரணம் மீண்டும் உங்கள் ஒவ்வொருவருக்கும் நன்றி.”இவ்வாறு அவர் கூறியுள்ளார்.