விஜய் சேதுபதி, டாப்சி ஆகிய இருவரும் முதன்முறையாக இணைந்து ஒரு திரைப்படத்தில் நடித்து வருகின்றனர் .
இப்படத்தை இயக்குநர் நடிகர் சுந்தர்ராஜனின் மகன் தீபக் சுந்தரராஜன் இயக்கி வருகிறார்.
இந்த படத்தின் படப்பிடிப்பு தற்போது ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள ஜெய்ப்பூர் என்ற பகுதியில் நடந்து வருகிறது .இந்நிலையில் தற்போது வந்துள்ள புதிய தகவலின்படி விஜய்சேதுபதி, டாப்ஸி ஆகிய இருவருமே இந்த படத்தில் இரண்டு வேடங்களில் நடித்து வருவதாகவும்,. இப் படத்தின் கதை பீரியட் மற்றும் சமகாலத்தில் நடக்கும் சம்பவங்களை அடிப்படையாகக் கொண்டுள்ளதாகவும், இரண்டு காலகட்டங்களிலும்,விஜய்சேதுபதி மற்றும் டாப்சி ஆகிய இருவரும் இரண்டு வேடங்களில் நடித்து உள்ளனர் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன.