தெலுங்கில் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்ற படம் ‘ஆர்.எக்ஸ்.100’ . இந்த படத்தை இயக்கிய அஜய் பூபதி,தற்போது, தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் உருவாகும் புதிய படத்தை இயக்கவுள்ளார்.
‘மகா சமுத்திரம்’ என்று பெயரிடப்பட்டுள்ள இப் படத்தில், சர்வானந்த் கதாநாயகனாக நடிக்க, முக்கியக் கதாபாத்திரத்தில் சித்தார்த் ஒப்பந்தமாகியுள்ளார். இந்தப் படத்தை ஏ.கே எண்டர்டெயின்மெண்ட்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது.
காதல் மற்றும் ஆக்சன் கதையாக உருவாகும் இப் படத்தில் நடிக்கும் மற்ற நடிகர்,நடிகையர் குறித்து அதிகாரபூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்றும் படக்குழு தெரிவித்துள்ளது.