கொரானா இல்லேன்னா கங்கனா என்கிற அளவுக்கு தலைப்பு செய்திக்கு பற்றாக்குறையாகி விட்டது.
பாலிவுட்டில் பரபரப்புகளுக்கென படங்களுடன் ஊடகங்களும் காத்திருக்கின்றன.
அதற்காக சில நடிகைகளும் செய்திகளை கொடுக்கிறார்கள்.
பிளாக் ஃபிரைடே, தேவ்.டி, தி லன்ச் பாக்ஸ், கேங்ஸ் ஆஃப் வாசிப்பூர் உட்பட பல இந்தி படங்களை இயக்கியுள்ளவர் இயக்குனர் அனுராக் காஷ்யப். இவர் நடிகரும் கூட. தமிழில், நயன்தாரா நடிப்பில் வெளியான இமைக்கா நொடிகள் படத்தில் வில்லனாகவும் நடித்திருக்கிறார் .
அவ்வப்போது சர்ச்சை கருத்துக்களை சமூக வலைதளங்களில் வெளியிட்டு,சர்ச்சையில் சிக்குவதும் வழக்கம்.
இவர் மீது பாலிவுட் நடிகை பாயல் கோஷ் பாலியல் புகார் கூறியுள்ளார். இது பாலிவுட்டில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. அவருக்கு நேர்ந்த, மீ டூ அனுபவம் பற்றியும், சினிமாவில் வாய்ப்பு தேடி கொண்டிருந்தபோது பட வாய்ப்புக்காக ஓர் பிரபல இயக்குனரை மும்பையில் உள்ள அவர் வீட்டில் சந்தித்தபோது, தன்னை தனியறைக்கு அழைத்துச் சென்று, திடீரென ஓர் ஆபாசப் படத்தை டிவியில் திரையிடத் தொடங்கினார். எனக்கு அதிர்ச்சியாக இருந்தது. ஒரு வழியாக அங்கிருந்து தப்பி ஓடி வந்தேன். பிறகு அந்தப் பக்கம் நான் செல்லவே இல்லை. என தெரிவித்து இருந்தார்.
பலரும் யார் அந்த இயக்குனர் என்று பாயல் கோஷிடம் கேள்வி எழுப்பி வந்தனர். இதையடுத்து பாயல் கோஷ்அவரது டுவிட்டரில், ‘இயக்குனர் அனுராக் காஷ்யப் என்னை மிக மோசமாகக் கட்டாயப்படுத்தி தவறாக நடக்க முயன்றார்.
பிரதமர் மோடிஜி ! இவர் மீது நடவடிக்கை எடுங்கள். இந்த இயக்குனருக்கு பின்னால் இருக்கும் அரக்கனை நாடு காணட்டும். இப்படி சொல்வதால் என் பாதுகாப்பு ஆபத்தானதாக இருக்கிறது என்பது தெரியும். எனக்கு உதவுங்கள்’ என்று பிரதமருக்கும் டேக் செய்திருந்தார்.
அனுராக் காஷ்யப் இந்த செய்தியை மறுத்து நான் ஒரு பெமினிஸ்ட் -பெண்ணியம் போற்றுகிறவன் என்பதாக கூறியிருக்கிறார்.
தற்போது காஷ்யப்புக்கு ஆதரவாக நடிகை டாப்ஸி கருத்துகளை சொல்லியிருக்கிறார்.
“அவர் ஒரு பெண்ணியவாதி என்பது எனக்குத் தெரியும்”என்றிருக்கிறார்.