இது அவசரத்தில் எடுத்த முடிவா, அல்லது சிந்தித்து பெற்றோர் சம்மதமுடன் எடுத்த முடிவா என்பது தெரியவில்லை. ஊடகங்களுக்கு தீனி போடுகிற முடிவாகவே தெரிகிறது.
சில நடிகைகள் போகிறபோக்கில் சிரித்துக்கொண்டே சொல்லிவிட்டு போய்விடுவார்கள் .
அது மாதிரியான செய்தியாகவே நடிகை சாய் பல்லவியின் கருத்து இருக்கிறது.
மலையாள சினிமாவில் பிரேமம் படத்தின் மூலம் மலர் டீச்சராக ஒட்டு மொத்த ரசிகர்களையும் கவர்ந்தவர்தான் இந்த சாய் பல்லவி.சென்னைப்பொண்ணு !
இவர் தமிழில் கரு, மாரி 2, என்ஜிகே ஆகிய படங்களில் நடித்திருந்தார். தெலுங்கு மற்றும் மலையாள மொழிகளிலும் முன்னணி நடிகையாக வலம் வரும் சாய்பல்லவி,சமீபத்தில் தனது சம்பளத்தை அதிரடியாக உயர்த்திவிட்டார் என கூறப்படும் நிலையில் மற்றொரு அதிரடி இறக் கியிருக்கிறார்..ஊடகம் ஒன்றில் தன்னுடைய திருமணம் குறித்து கூறுகையில்,” நான் திருமணமே செய்து கொள்ளப் போவதில்லை .காரணம், திருமணம் செய்து கொண்டால் அப்பா அம்மாவை வீட்டு மாப்பிள்ளை வீட்டிற்கு செல்ல வேண்டும். அப்பா, அம்மாவை பிரிவதில் எனக்கு மனசில்லை. கடைசி வரை அவர்களுடன் இருந்து அவர்களை மகிழ்ச்சியாக பார்த்துக் கொள்ள வேண்டும் என்பதே என்னுடைய ஆசை என தெரிவித்துள்ளார்.
வீட்டோட மாப்பிள்ளை என்கிற ஆப்ஷனும் இருக்கே பல்லவி.!