இயக்குனர் மிஸ்கின் தனது பிறந்த நாளை முன்னிட்டு, இன்று தனது அடுத்த படத்தை அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளார்.பிசாசு படத்தின் 2 ம் பாகமாக உருவாகும் இப்படத்தில்,ஆண்ட்ரியா கதையின் நாயகியாக நடிக்கிறார்.
கார்த்திக் ராஜா இசையமைக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு வரும் நவம்பர் மாதம் தொடங்கவுள்ளது.இந்நிலையில்,இயக்குநர் மிஸ்கின் பிறந்த நாளை தமிழ் திரையுலகின் நட்சத்திர இயக்குநர்களான, மணிரத்னம், ஷங்கர், கெளதம் மேனன்,’பூ’ சசி, மற்றும் பாலாஜி சக்திவேல் அனைவரும் ஒன்றிணைந்து ‘கேக்’ வெட்டி கொண்டாடியுள்ளனர்.
இப்புகைப்படங்களை இயக்குனர் மிஸ்கின் தனது டுவிட்டரில் வெளியிட்டுள்ளார்.