மலையாளத்தில்.ஜீத்து ஜோசப் இயக்கத்தில், மோகன்லால், மீனா, ஆஷா சரத், சித்திக் ஆகியோரது நடிப்பில் வெளியாகி சூப்பர் ஹிட்டடித்த திரைப்படம் ‘த்ரிஷ்யம்’. இதையடுத்து இப்படம் தமிழ், தெலுங்கு, இந்தி உள்ளிட்ட மொழிகளிலும் ரீமேக் செய்யப்பட்டு பெரிய வரவேற்பை பெற்றது.தொடர்ந்து சிங்களத்திலும்,சீனாவிலும் ரீமேக் செய்யப்பட்டு அங்கும் நல்ல வரவேற்பை பெற்றது.
இந்நிலையில் இப்படத்தின் 2 ம் பாகம் ஜீத்து ஜோசப் இயக்கத்தில் உருவாகிறது.இதில், முதல் பாகத்தில் நடித்த மோகன்லால், மீனா, எஸ்தர் அனில் உள்பட மற்றும் பலர் நடிக்கின்றனர். இதன் படப்பிடிப்பு கொச்சியில் நாளை தொடங்க உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், கடந்த 3 நாட்களுக்கு முன் படக்குழுவினர் அனைவருக்கும் அரசின் அறிவுறுத்தலின் படி,கொரோனா பரிசோதனை செய்யப்பட்டு, தனிமைப்படுத்தப்பட்டு உள்ளதாக கூறப்படுகிறது.
இந்நிலையில், நாளை திட்டமிட்டபடி படப்பிடிப்பு தொடங்கினாலும் மோகன்லால் வரும் 26 ஆம் தேதிதான் படப்பிடிப்பில் கலந்து கொள்ள உளளார் என்கிறார்கள். கொச்சியில் நடக்கும் 10 நாட்கள் படப்பிடிப்புக்கு பின்னர், தொடுபுழாவில் படப்பிடிப்பு நடத்தப்படவுள்ளது.