சுஷாந்த் சிங்கின் மர்ம மரணத்துக்கு நடிகை ரியா சக்ரவர்த்திதான் காரணம் என இணைத்துப் பேசப்படுகிறது.விசாரணையும் நடக்கிறது
30 ஆண்டுகளுக்கு முன்னர் பிரபல நடிகையின் கணவர் தற்கொலை செய்து கொண்ட நிகழ்வை,இந்த சம்பவத்துடன் ஒப்பிட ஆரம்பித்து இருக்கிறார்கள்.
அதாவது பிரபல நடிகர் காதல் மன்னன் என்று அழைக்கப்பட்ட ஜெமினிகணேசனின் மகள்தான் ரேகா. இந்தியில் பிரபல நடிகை. உச்ச நட்சத்திரம் அமிதாப்புடன் இணைத்துப்பேசப்பட்டவர்.
இவருக்கும் முகேஷ் அகர்வால் என்பவருக்கும் 1990 -ல் கல்யாணம் நடந்தது .ஆனால் ரேகாவின் துப்பட்டாவை மின் விசிறியில் கட்டி தூக்கில் தொங்கி விட்டார் முகேஷ் .கிட்டத்தட்ட 30 ஆண்டுகள் கடந்து விட்ட நிலையில் அந்த சம்பவத்தை இப்போது சுஷாந்த் -ரியா வுடன் ஒப்பிட தொடங்கிவிட்டார்கள்.
இதற்கு தர்மேந்திராவின் மனைவி ஹேமமாலினி கண்டனம் தெரிவித்திருக்கிறார்.
“அப்பாவி ரேகாவை எதற்காக இழுக்கிறீர்கள்? இது நியாயமே இல்லை.ஒரு சீனியர் நடிகை. கவுரவமாக வாழ்ந்து கொண்டிருப்பவரை மீடியாக்கள் இழுக்கலாமா ?ரேகா இன்று தனிமையாக வாழ்ந்து கொண்டிருக்கிறார் .மறந்துபோன ஒரு சம்பவத்தை எதற்காக தேவையற்ற முறையில் இழுக்கிறீர்கள்?” என்று கேட்டிருக்கிறார். இவரது உயிர்த் தோழி ரேகா .இருவருமே தமிழ்நாட்டை சேர்ந்தவர்கள்.