சூரியா ,நடிக்கப்போகும் வாடிவாசல் . சூரி நடிக்கவிருக்கிற பெயரிடப்படாத படம் இவைகளை அடுத்தடுத்து இயக்கவிருக்கிறார் வெற்றிமாறன். இந்தப்படங்களின் படப்பிடிப்பு எப்போது தொடங்கப்படும் என்பது இன்னும் முடிவு செய்யப்படவில்லை.
தளபதி விஜய் -வெற்றிமாறன் இணையக்கூடிய மற்றொரு படம் பற்றிய தகவலை வெளியிட்டிருக்கிறார் அந்த படத்துக்கு இசை அமைக்கப்போகிற ஜி.வி.பிரகாஷ்.
’விஜய்-வெற்றிமாறன் இணையும் படம் உருவாவது உறுதி. ஆனால் அப்படம் எப்போது தொடங்கும் உறுதியாக கூற முடியாது. அனேகமாக இந்த ஆண்டு இறுதியில் அல்லது அடுத்த ஆண்டு தொடங்கலாம்.”என்றார் .
விஜய், வெற்றிமாறன் இருவருடன் இணைந்து பணியாற்ற ஆவலுடன் காத்திருப்பதாக கூறிய ஜி.வி.பிரகாஷ், “சூர்யாவின் வாடிவாசல் திரைப்படம் ஒரு கில்லர் ஸ்கிரிப்ட் என்றும்,கண்டிப்பாக செம படமாக இருக்கும் ” என கூறியுள்ளார்.