
தமிழ்த்திரையுலகில் 2010-ல் துரோகி படத்தின் மூலம் இயக்குனராக களமிறங்கியவர் சுதா கொங்கரா, தொடர்ந்து,இயக்கிய இறுதிச்சுற்று அவருக்கு நட்சத்திர இயக்குனர் அந்தஸ்தை ஏற்படுத்தி கொடுத்தது.
தற்போது சூர்யா நடிப்பில் சுதா கொங்கரா இயக்கியுள்ள சூரரைப் போற்று விரைவில் ஓடிடி தளத்தில் வெளியாகவுள்ளது.
இப்படத்தைத் தொடர்ந்து தல அஜித் நடிக்கும் புதிய படத்தை இயக்க உள்ளதாக கோலிவுட்டில் பரவலாக பேசப்பட்டு வருகிறது. 
இத்தகவலை உறுதி படுத்துவது போல், இசையமைப்பாளரும் நடிகருமான ஜி.வி. பிரகாஷ் குமார் தனது சமூக வலைதளத்தில்,ரசிகர்களுடனான உரையாடலில் ஒரு தகவலை பதிவு செய்திருக்கிறார் .
அஜித் ரசிகர் ஒருவர்,’அஜித் – சுதா கொங்கரா படம் இருக்கா? இல்லையா?’ என்றுஎழுப்பிய கேள்விக்கு,சிறிதும் தயக்கமின்றி, ‘சுதா கொங்கரா, என்கிட்ட கதை சொல்லிட்டாங்க.அந்த படம் வந்தா அது வேற லெவலில் இருக்கும்’ என ஜி.வி. பிரகாஷ் குமார் கூறி இருப்பது அஜித் ரசிகர்களை உற்சாகத்தில் ஆழ்த்தியுள்ளது.




