என்னத்த சொல்லுங்க..கஸ்தூரி இருந்தால் கலகலப்புத்தான். தொடர்ச்சியாக அவர் படங்களில் நடித்துக் கொண்டிருந்த காலத்தில் செட்டில் அவர் இருந்தால் சிரிப்பும் ரகளையுமாகத்தான் இருக்கும். துணிச்சலானவர். அந்த தைரியம்தான் எத்தனை ஏவுகணைகள் வந்தாலும் அதை தனது இடது கையினால் முறித்துப்போட்டு விடுகிறார்.
சிலரைப்போல சில்லறைத்தனமாக நடந்து கொள்வதில்லை.
அனுராக் காஷ்யப் மீது பாலியல் வன்புகார் கூறப்படுவது பற்றி தனது டிவிட்டர் பக்கத்தில் அவரது கருத்தினை வெளியிட்டிருந்தார்.
”எந்த ஆதாரமும் இல்லாமல் , ஒருவர் மீது பாலியல் வன்முறை குற்றச்சாட்டை முன் வைப்பது சட்டப்படி ஏற்புடையது அல்ல” என பதிவிட்டிருந்தார்
இதற்கு ஒரு நெட்டிசன் ”உங்களுக்கு நெருக்கமானவருக்கு இது போல நடந்தாலும், இப்படிதான் சட்டம் பேசுவீர்களா..?”‘ என கேட்க .
அதற்கு கஸ்தூரி, ”நெருக்கமானவர் என்ன.?, எனக்கே இது நடந்திருக்கிறது. பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளானவர்கள் மீது எனக்கு இரக்கம் உள்ளது. ஆனால், எனது தனிப்பட்ட பார்வை சட்டம் ஆகாது.. சட்டம் உருவாக்கப்பட்டதன் காரணமே, போலியான புகார்களை ஒதுக்கிவிட்டு , ஆதாரத்தை நோக்குவதே” என அவர் பதிவிட்டுள்ளார்.