ஹெராயின் இல்லாமல் ஹீரோயின்ஸ்சா ?
போதை பொருள் கட்டுப்பாடு துறையின் கண்களில் பாலிவுட் ராணிகள் மாட்டிக் கொண்டிருக்கிறார்கள். பொந்துக்குள் புகுந்தாலும் வட்டமிடுகிற வான் கழுகுகளின் கண்ணில் படாது போகுமா?
ரகளை ராணி கங்கனா ரனாவத் போட்ட போட்டில் அரண்டு போய்க் கிடக்கிறது பாலிவுட் ஆண் -பெண் உலகம். நார்க்காட்டிக் கண்ட்ரோல் போர்டில் இருந்து எப்போது சம்மன் வருமோ என்கிற குளிர் ஜுரத்தில் இருக்கிறார்கள்.
சற்று முன் ஆங்கில நாளிதழ் கொடுத்த தகவலின்படி இந்த வாரத்தில் பிரபல நடிகை தீபிகா படுகோனே விசாரிக்கப்படுவாராம். பிள்ளையாரை பிடிச்ச சனி அரசமரத்தை விட்டு வைக்குமா?
தீபிகாவின் மானேஜர் கரிஷ்மா ,ஹேர் ஸ்டைலிஸ்ட் அமித் ஆகியோரும் சிறப்பு அழைப்பாளர்கள் என்கிறார்கள். இவர்களுட ஷ்ரத்தா கபூர், சாரா அலிகான் ஆகிய நாயகிகளும் விசாரணை வளையத்துக்குள் வருகிறார்கள் என்கிறது அந்த செய்தி.
இதன் விளைவுகள் எப்படி இருக்குமோ ? கங்கனாவை விட்டு வைப்பார்களா?