சின்னத்திரை நிகழ்ச்சி மூலம் லட்சக்கணக்கில் ரசிகர்களின் மனதில் இடம்பிடித்த ஓவியா, அவ்வப்போது தனது டுவிட்டரில் பதிவு செய்யும் புகைப்படங்கள்,வீடியோக்கள் உள்ளிட்ட பதிவுகளுக்கு அவரது ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பு கிடைத்து வருகிறது.
இந்த நிலையில், தற்போது ஓவியா,தனது டுவிட்டர் பக்கத்தில் வீடியோ ஒன்றை பதிவு செய்துள்ளார். அதில், ஓவியாவின் காலில் பாம்பு ஒன்று தன்னைத்தானே முழுங்குவதை போன்ற ஒரு டாட்டூவை பதிவிட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.
ஓவியாவின் காலை பாம்பு சுற்றியது போன்று உள்ள இந்த டாட்டூ வீடியோ தற்போது வைரல் ஆகி வருகிறது.காலை சுற்றிய பாம்பு கடிக்காமல் விடாது என்பார்கள். எச்சரிக்கையாக இருப்பது ஓவியாவுக்கு நல்லது.