தெலுங்கில் கீதா கோவிந்தம்,சரிலேரு நீகேவரு, பீஷ்மா உள்ளிட்ட படங்களின் மூலம் பிரபலமானவர் நடிகை ராஷ்மிகா மந்தனா. கன்னட படஉலகிலும் முன்னணி நடிகையாக வலம் வரும் ராஷ்மிகா, தற்போது தமிழில் பாக்யராஜ் கண்ணன் இயக்கத்தில் கார்த்தியுடன் ஜோடிசேர்ந்து சுல்தான் படத்தில் நடித்து வருகிறார். தனது சமூக வலைதளம் மூலம் ராஷ்மிகா,அவ்வப்போது தனது ரசிகர்களுடன் உரையாடியும் வருகிறார்.
சமீபத்தில் ரசிகர்களுடனான உரையாடலில் , ஒரு கேள்விக்கு பதிலளிக்கையில், “நான் படப்பிடிப்புக்காக பிரபல ஓட்டல் ஒன்றில் தங்கியிருந்த போது, ‘என் அறையில் இருந்த தலையணையின் உரை மிகவும் அழகாக இருந்தது.அதனால் நான் அதனை யாருக்கும் தெரியாமல் திருடிவிட்டேன்” என கண்களை சிமிட்டியபடியே கூறியுள்ளார்.
மேலும் சினிமா படப்பிடிப்பு குறித்து கூறுகையில், “படப்பிடிப்பின் போது கேமரா முன்பு நிற்பது தேர்வு எழுதுவது போல.அது கஷ்டமாக இருந்தாலும், ஒரு திரில்லான அனுபவத்தைக் கொடுக்கும். ஒரு காட்சி படமாக்கப் பட்டவுடன் மொத்த படக்குழுவும் கைத்தட்டி பாராட்டும் போது மிகவும் ஆனந்தமாக இருக்கும். மீண்டும் படப்பிடிப்புக்கு செல்லும் நாளை ஆவலுடன் எதிர்நோக்கி காத்திருக்கிறேன்” என்கிறார். இது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.