பாலிவுட்டின் கவர்ச்சி சர்ச்சை நடிகை பூனம் பாண்டே, அவரது காதலர் சாம் பாம்பே இருவரும் நீண்ட நாள் காதலர்கள். இருவரும் ‘லிவிங் டுகெதர்’ பாணியில் ஒன்றாகவே வசித்து வந்தனர். இந்நிலையில், கடந்த செப்டம்பர் 10-ஆம் தேதி இருவருக்கும் திருமணம் நடந்தது .தனது திருமண புகைப்படத்தை இன்ஸ்டாகிராமில் பதிவிட்டு, “ஏழேழு ஜென்மங்களும் உன்னேடு வாழ காத்திருக்கிறேன்”என்றும் குறிப்பிட்டிருந்தார்.
இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு தனது கணவரான சாம் பாம்பே தன்னை பாலியல் பலாத்காரம் செய்தும் , அடித்து துன்புறுத்தியதாகவும் கோவா போலீசில் பூனம் பாண்டே புகார் கொடுத்தார் . இதையடுத்து,பூனம் பாண்டேவின் கணவர் சாம் பாம்பே நேற்று கோவாவில் கைது செய்யப்பட்டார்.ஏழேழு ஜென்மங்களும் உன்னேடு வாழ காத்திருக்கிறேன் என பதிவிட்ட பூனம் பாண்டேவுக்கு முழுசா 10 நாள் கூட தாங்கலையே என நெட்டிசன்கள் பலரும் கிண்டலடித்து வருகின்றனர்.