தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகரான விஜய் தேவரகொண்டா, கடந்த வாரம் வெளியிட்ட அறிக்கை ஒன்றில், “என் பெயரை பயன்படுத்தி, என்னோடு நடிக்க வைப்பதாக சொல்லி, சில மோசடி தயாரிப்பு நிறுவனங்கள், நடிகைகளிடம் அணுகுகிறார்கள். அவர்களிடம் எச்சரிக்கையாக இருங்கள்” என குறிப்பிட்டிருந்தார்.
இது தெலுங்கு மற்றும் தமிழ் படஉலகில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.இந்நிலையில், இவ்விவகாரம் குறித்து நடிகை ஆண்ட்ரியா கூறியதாவது,” தயாரிப்பாளர் என சொல்லிக்கொண்டு என்னை ஒருவர் அணுகினார். அவர் ஒரு வெப் தொடர் தயாரிக்க உள்ளதாகவும்,, அதில் விஜய் தேவரகொண்டாவின் நான் ஜோடியாக நடிக்க வேண்டும் என சொன்னார்.அதற்கு நான் முதலில் கதை கேட்க வேண்டும் என்று சொன்னேன். இயக்குனரை கதை சொல்ல அனுப்புவதாக கூறிவிட்டு சென்றவர், அதன் பிறகு வரவே இல்லை.
நான் சில நாட்கள் காத்திருந்து விட்டு அதன் பிறகு விசாரித்து பார்த்ததில் அப்படி எந்த ஒரு தயாரிப்பாளரும், பட நிறுவனமும் கிடையாது என தெரியவந்தது”.பெண் நடிகைகளை எப்படியும் ஏமாற்றி விடலாம் என தான் அலைகிறார்கள். இதுபோன்ற மோசடி செய்பவர்களிடம், பெண்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்கிறார்.