கேப்டன் விஜயகாந்துக்கு கொரானா.
எப்படி தொற்று வந்தது? வீட்டிலேயே தங்கி யாரையும் பார்க்காமல் இருந்தவர்க்கு எப்படி தொற்று ஒட்டியது?
தே.மு.தி.க., தலைவர் விஜயகாந்த் (வயது 68) உடல் நல குறைவால் பாதிக்கப்பட்டிருந்தநிலையில் அவர், பெரிய அளவில் கட்சி பணிகளில் கவனம் செலுத்தாமல், வீட்டில் ஓய்வில் இருந்து வருகிறார்.
இவரை பரிகார பூஜை என சொல்லி ராமேஸ்வரம் அழைத்து சென்றார்கள். யாருமே மாஸ்க் அணியவில்லை.சமூக இடைவெளியும் அனுசரிக்கவில்லை.பின்னர் கட்சி ஆபீசுக்கு அழைத்து சென்று அங்கு நிகழ்ச்சி நடத்தினார்கள். உடல்நலமில்லாமல் இருக்கிற அவரை கொரானா காலத்தில் மிகவும் எச்சரிக்கையுடன் பாதுகாக்கவேண்டிய குடும்பத்தினரே இப்படி அலைக்கழித்ததின் விளைவாக கூட்டத்தில் இருந்த யாரோ சிலரால் தொற்று ஏற்பட வாய்ப்பு இருக்கிறதல்லவா என அவரது ஆதரவாளர்கள் கேட்கிறார்கள்.
அவருக்கு தற்போது அக்குபஞ்சர் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. .இந்நிலையில்,தேமுதிக தலைவர் விஜயகாந்துக்கு கடந்த 2 நாட்களாக கொரோனா அறிகுறி இருந்ததாகவும் இதனை அடுத்து அவர் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் கொரோனா பரிசோதனை செய்து கொண்டதாகவும் தகவல்கள் வெளியாகின.
இந்த பரிசோதனையின் முடிவில் அவருக்கு கொரோனா பாசிட்டிவ் உறுதி செய்யப்பட்டுள்ளதால் அவர் சென்னை நந்தம் பாக்கத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இது குறித்து மருத்துவமனை நிர்வாகம் தரப்பில் விசாரித்தபோது,”தேமுதிக தலைவர் விஜயகாந்தின் உடல்நலம் தற்போது சீராக இருப்பதாகவும் அவரது உடல்நிலையை மருத்துவர்கள் தீவிரமாக கண்காணித்து வருவதாகவும் அவர் விரைவில் குணமாகி விடுவார் என்றும் மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
அவர் ஓர் இரும்பு மனிதர். வைராக்கியம் படைத்தவர். எதற்கும் அஞ்சாதவர். அவருக்கா கொரானா?
கேப்டன் உடல்நலம் பற்றி தேமுதிக சார்பில் ஒரு அறிக்கை வெளியாகி இருக்கிறது.யாருடைய கையெழுத்தும் இல்லாமல்.!