பாலிவுட், டோலிவுட் படங்களில் நடித்து வருகிறவர் நடிகை பூனம் பாண்டே,
இவரின் நீண்ட நாள் காதலரான சாம் பாம்பே என்பவரை .கடந்த செப்டம்பர் 10-ம் தேதி திருமணம் செய்து கொண்டார்.
தேனிலவு சென்று திரும்பிய நடிகைக்கு என்னென்ன நடந்ததோ!
பரபரப்பான புகாரை போலீசில் தட்டி விட்டார்.
புகாரின் அடிப்படையில், ‘புது மாப்பிளை’ சாம் பாம்பே கைது செய்யப்பட்டார். கல்யாணமான 13- வது நாளிலேயே கணவனை கைது செய்து, ‘உள்ளே’ தள்ளும் அளவுக்கு அப்படி என்ன தான் நடந்தது ?
“காதலிக்கும் போதே, அவருக்கு கோபம் அதிகமாக இருக்கும் என்பது தெரியும். ஆனால், திருமணத்திற்கு பின்னர் சரியாகி விடுவார் என எதிர்பார்த்தேன்.ஆனால், திருமணத்திற்கு பிறகும் அவர் கொஞ்சம் கூட மாறவில்லை.
ஜாலியாக ஹனிமூன் வந்த இடத்தில், நாங்கள் தங்கியிருந்த ஹோட்டலில் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. பின்னர், அவர் என்னை ஒரு மிருகத்தை அடிப்பது போல அடிக்கத் தொடங்கினார். மூஞ்சியில் குத்தினார். வலுக்கட்டாயமாக, பலாத்காரம் செய்யும் முயற்சியில் ஈடுபட்டார்.
(எங்கே குத்துவது என்கிற விவஸ்தை இல்லையா? நடிகையை மூஞ்சியில் குத்தினால் முகம் கெட்டுவிடாதோ!)
நான் அவரிடம் இருந்து தப்பித்து வெளியே ஓடினேன். இப்படி மிருகத்தை போட்டு அடிப்பது போல அடிக்கும் நபருடன் இனியும் சேர்ந்து வாழ முடியாது. அவரை மிகவும் காதலித்தேன். ஆனால், அவருக்குள் இருக்கும் மிருகத்தை என்னால் சமாளிக்க முடியாது. இனி சிங்கிளாகவே வாழ்ந்தாலும் வாழ்வேனே தவிர மீண்டும் இந்த திருமண வாழ்க்கையை தொடர மாட்டேன் ” எனக் கூறியுள்ளார்.