என்ன ஒரு அலட்டல் ,அப்படி ஒரு தெனாவெட்டு. உலக அழகியெல்லாம் காலடி மண்ணு மாதிரி என்கிற நினைப்பு.இப்ப எல்லாத்துக்கும் சேர்த்து வச்சான் பாரு ஆண்டவன் ஒரு ஆப்பு.அத்தி மர ஆப்பு. லேசில் விடாது கருப்பு !
யாரை சொல்றீங்க ?அத விடுங்க!
எப்ப பார்த்தாலும் தன்னுடைய அரை நிர்வாண படங்களைப்போட்டு ,மார்பகங்களை காட்டி தன்னை ஒரு சூப்பர் மாடல் என்று தனக்குத்தானே பட்டம் சூட்டிக்கொண்ட ஒருத்தருக்கு கேரளா போலீஸ் வலை விரிச்சிருக்கு.!
மீரா மிதுன் .பிக்பாஸ் பிரபலம். சின்ன சின்ன வேஷங்களில் சினிமாவில் பார்த்திருக்கலாம். கமல், சூரியா , விஜய் ஆகிய நடிகர்களையும் அவர்களின் ரசிகர்களையும் இழிவாக திட்டி பதிவுகளைப்போட்டவர்.
தமிழ்நாட்டு போலீசுக்கு இவர் மீது என்ன கரிசனமோ ,கண்டு கொள்வதில்லை. ஆனால் கேரளா போலீஸ் அப்படி இல்லை. வழக்கு பதிவு செய்திருக்கிறது .எந்த நேரத்திலும் கைதாக வாய்ப்பு இருப்பதாக சொல்கிறார்கள். மலையாளிகளை இழிவுபடுத்தியதாக குற்றம் சாட்டுகிறார்கள்.
சமூக வலைதள ரசிகர்களின் மத்தியில் கடும் எதிர்ப்பையும் சம்பாதித்துள்ளார். , கடந்த சில மாதங்களுக்கு முன் அவர் வெளியிட்ட’வீடியோ’வில், மலையாளிகளுக்கு எதிராக தகாத வார்த்தைகளால் பேசியதாக, நடிகை மீரா மிதுன் மீது, கேரள மாநிலம் இடுக்கி மாவட்டம், தொடப்புழாவில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
இதையடுத்து சட்ட சிக்கலில் சிக்கியுள்ள மீரா மிதுன் கைது செய்யப்பட உள்ளதாகவும் கூறப்படுகிறது..இவ்விவகாரம் குறித்து, இடுக்கி போலீசார் கூறுகையில்,”மீராமீதுன் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. விசாரணை இன்னும் நடந்து வருகிறது. இந்த புகார் குறித்துநீதிமன்றத்திலும் வழக்கறிஞர் ஒருவர் மூலமாக வழக்கும் தொடரப்பட்டுள்ளது. என்கிறார்கள்