சமீப காலமாக ,நடிகர் விஷால் பலருக்கும் தன்னால் முடிந்த உதவிகளை செய்து வருகிறார். இந்நிலையில் சமீபத்தில் ஒரு விவசாயி, வங்கி ஊழியர்கள் மற்றும் போலிஸாரால் தாக்கப்பட்டது கண்டு தமிழ் நாடே அதிர்ந்தது. கோடிகோடியாய் வங்கிகளில் கடன் வாங்கியவர்கள் எல்லாம் சக்தி வாய்ந்தவர்களின் உதவியோடு ,வெளிநாடுகளில் நிம்மதியாய் ஜாலி ட்ரிப் அடித்துக் கொண்டிருக்க,ஏழை விவசாயியை காட்டு மிராண்டித்தனமாய் சில காக்கி அரக்கர்கள் கொடூரமாய் தாக்கிய
அந்த வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகின்றது. இதை அறிந்த விஷால் உடனே ஒரு அறிக்கையை தன் டுவிட்டரில் வெளியிட்டுள்ளார்.
இதில் அந்த விவசாயி கடனை நான் கட்டுகிறேன் என்று கூறியுள்ளார். இதோ அந்த டுவிட்…