தளபதி விஜய் ,அர்ஜுன் ,சிரிப்பு நடிகர் மயில்சாமியைதைத்தவிர ,இயக்குநர்களில் பாரதிராஜா ,கே.எஸ் .ரவிகுமார் ,அமீர் ஆகியோரைத் தவிர சினிமா பிரபலங்கள் எவரையும் காணவில்லை, பாடும் நிலா எஸ்.பி.பாலசுப்பிரமணியத்தின் இறுதிச் சடங்கில் !
எங்கே போனார்கள்?
60 வயதினைத் தாண்டியவர்கள் என்பதால் வரவில்லையோ என்னவோ? கொரானா தொற்றிக் கொள்ளக்கூடும் என்கிற அச்சம்தான் காரணம் என்கிறார்கள்.!உண்மைதான் !
உலகநாயகன் கமல்ஹாசன் மருத்துவமனைக்கு வந்து விசாரித்து விட்டுப்போனதை போல சூப்பர் ஸ்டார்களும் முன்னணி நடிகர்களும் ,முன்னணி இயக்குநர்களும் மருத்துவமனைக்காவது வந்து சென்றிருக்கலாம் அல்லவா! தாமரைப்பாக்கம் பண்ணை வீட்டுக்கு இறுதி அஞ்சலி செலுத்த இசைஞானி இளையராஜா வந்திருக்கலாம் .வந்தால் காவல்துறை பாதுகாப்பு அளிக்காதா? பாலுவின் நண்பர் ராஜா எங்கே என்றுதானே அழுது துடித்த அத்தனை ஜனமும் கேட்டது.அஞ்சலிக்குக் கூட காப்பி ரைட் உரிமை போட்டது ஏன் ?
விசாரித்தால் எங்கே இருக்கிறார் என்பதே தெரியவில்லை என்கிறது சினிமா வட்டாரம்.
எந்தவித முன்னறிவிப்பும் இல்லாமல் ,ரசிகர் மன்ற நிர்வாகிகளுக்கும் சொல்லாமல் வந்து அஞ்சலி செலுத்திவிட்டுச் சென்ற தளபதி விஜயை மக்கள் கூட்டம் தலை மீது தூக்கிவைத்துக் கொண்டு கொண்டாடுகிறது. ஆர்ப்பரிப்பு இன்றி அவர் வந்த பாங்கும் காலணியை கழற்றி விட்டு சடலத்தை சுற்றி வந்து வணக்கம் செலுத்திய பண்பும் ,சரணுக்கு ஆறுதல் சொன்னதும் உயரிய பண்பு.உயர்ந்த உள்ளம்.மேலும் ஒட்டு மொத்த தமிழகமே விஜய்யின் செய்கையை பாராட்டி தள்ளுகிறது அதாவது, இறுதி சடங்கில் கலந்து கொள்ள விஜய் வந்த போது அங்கு திடீர் தள்ளுமுள்ளு ஏற்பட, போலீசார் கூட்டத்தை கட்டு படுத்தும் நடவடிக்கையில் இறங்கினர் அப்போது ஒரு ரசிகர் கழன்று விழுந்த செருப்பை கையில் எடுக்க கூட்டத்தில் முண்டியடிப்பதை பார்த்த விஜய், அந்த செருப்பை தானே குனிந்து கையில் எடுத்து கொடுக்க அந்த காட்சி அத்தனை தொலைக்காட்சிகளிலும் ஒளிபரப்பானது , சே, என்ன மனுஷன்யா என பலரும் விஜய்யை பாராட்டி வருகின்றனர்.
இவ்வளவுக்கும் விஜய்க்கு தாமரைப்பாக்கம் எந்த திசையில் இருக்கிறது என்பது கூட தெரியவில்லை. தனது நெருங்கிய நண்பர் ஒருவரிடம் ரூட் கேட்டுவிட்டு சென்றிருக்கிறார் .அவரைப்பார்த்ததும் .காவல்துறைக்கு அதிர்ச்சி.!
மொத்தத்தில் சினிமா உலகம் கொரானா பயத்தில் உறைந்திருக்கிறது.