
தழுவல் படங்கள் எடுப்பதில் கில்லாடி.!
ராஜா ராணி என்ற திரைப்படத்தின் மூலம் இயக்குநர் அவதாரம் எடுத்தார்.இப்படம் மணிரத்னத்தின் மௌனராகம் படத்தின் அப்பட்டமான தழுவல் என பலரும் கிண்டல் அடித்தாலும் அப்படத்துக்கு கிடைத்த வரவேற்பு காரணமாக தமிழ் சினிமாவின் கமர்சியல் இயக்குநர்களில் ஒருவரானார்.

தொடர்ந்து, தளபதி விஜய்யை வைத்து தெறி , மெர்சல் மற்றும் பிகில் என அடுத்தடுத்து பக்கா கமர்ஷியல் படங்களையும் கொடுத்தார்.
முதல் படத்தில் சம்பளமாக ரூ 10 லட்சம் வாங்கிய அட்லீ, நான்காவது படத்திலேயே கோடிகளில் இரட்டை இலக்கங்களில் சம்பளத்தை அதிரடியாக உயர்த்திவிட்டார் என்கிறார்கள்.
இந்நிலையில்,அடுத்ததாக பாலிவுட் சூப்பர் ஸ்டார் ஷாருக் கானை வைத்து இந்தியில் ஒரு படத்தை இயக்க உள்ளார்.
இப்படத்திற்காக அவரின் சம்பளம் தனது குருநாதரும்,பிரமாண்ட இயக்குனருமான ஷங்கரின் சம்பளத்தை எட்டி பிடிக்கும் அளவுக்கு பேசப்பட்டு ஒப்பந்த பத்திரமும் போடப்பட்டு விட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
அடுத்த 2 படங்களில் இயக்குனர் ஷங்கரையே ஓவர்டேக் செய்து விடுவார் என்கிறது கோலிவுட் வட்டாரம்.அதிக சம்பளம் வாங்குவதினாலேயே ஷங்கரை ஓவர்டேக் செய்துவிட முடியுமா?