9 ஆண்டுகளுக்கு முன்பு கே.எஸ்.ரவிக்குமார் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் வரலாற்று பின்னணியில் உருவாக்கப்பட்ட கதைதான் i‘ராணா’ .
இதை திரைப்படமாக்கும் முயற்சியில் மும்முரமாக இறங்கினார் ரவி..
படப்பிடிப்பு கடந்த 2011-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் தொடங்கியது. ஆனால் படப்பிடிப்பின் முதல் நாளிலேயே ரஜினிகாந்த்துக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டது.இதையடுத்து ரஜினிகாந்த் சிகிச்சைக்காக வெளிநாட்டுக்கு சென்றதால் ‘ராணா’ அப்படியே கிடப்பில் போடப்பட்டது.
இந்நிலையில் கடந்த 6 மாதங்களுக்குமுன்பு,ரஜினிகாந்த் இயக்குநர் கே.எஸ்.ரவிக்குமாரை அழைத்து ராணா கதை குறித்து விவாதித்ததாக கே.எஸ்.ரவிக்குமார் கூறியிருந்தார் . ,
‘எந்திரன்’ படத்தை ரஜினி சாரும், ‘தசாவதாரம்’ படத்தை நானும் முடித்து விட்டு ராணா படத்துக்கு தயாரானோம். ராணா படம் ரஜினி மற்றும் எனக்கும் அடுத்த பெரிய வரலாற்று சிறப்புமிக்க திரைப்படமாக இருக்கும் என எதிர்பார்த்தோம்,
ஆனால் நடக்கவில்லை.எனக்கு நேரம் கிடைக்கும் போதெல்லாம் நான் ‘ராணா’படத்தின் ஸ்கிரிப்டை அடிக்கடி படித்து பார்ப்பேன். அது ரஜினி சாரின் கதை, நான் அதற்கு திரைக்கதை எழுதி இருந்தேன். இந்நிலையில்,கடந்த 6 மாதங்களுக்கு முன்பு என்னை அழைத்து ரஜினிகாந்த் மீண்டும் அந்த கதையை சொல்லும்படி கேட்டார். அதைக்கேட்ட பிறகு ‘இப்போ நம்மால் பண்ண முடியுமா?’ என கேட்டார்.
முடியுமென நான் சொன்னேன்.
அவர் மனதில் அரசியல் இருக்கிறது என்பதால் இந்த படத்திற்கு தேவைப்படும் அளவு அதிக நேரம் ஒதுக்கி நடிக்க முடியுமா என அவர் கேட்டார்.
அதில் ரஜினிகாந்த் நடித்தால் தான் நல்லா இருக்கும். ஆனால் ராணா கதை வருங்காலத்தில் என்ன ஆகும் என்பது எனக்கு தெரியவில்லை”என்று கே.எஸ்.ரவிக்குமார் தெரிவித்திருக்கிறார்.